டிஜிட்டல் கைது மிரட்டல்: பெங்களூரு பெண்ணிடம் ரூ.2 கோடி மோசடி

டிஜிட்டல் கைது மிரட்டல்: பெங்களூரு பெண்ணிடம் ரூ.2 கோடி மோசடி
Updated on
1 min read

பெங்களூரு: பெங்களூரு​வில் உள்ள நியூ திப்​பசந்​தி​ராவை சேர்ந்​தவர் ரம்யா (பெயர் மாற்​றப்​பட்​டுள்​ளது). 39 வயதான இவர் தனது 10 வயது மகனுடன் அங்​குள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்​பில் வசித்து வரு​கிறார். இவர் கடந்த நவம்​பர் 27ம் தேதி ஒயிட் ஃபீல்ட் காவல் நிலை​யத்​தில் புகார் ஒன்றை அளித்​தார்.

அதில், ‘‘கடந்த ஜூன் 19-ம் தேதி தனியார் கூரியர் நிறு​வனத்​தில் இருந்து பேசுவ​தாக ஒரு​வர் என்​னிடம் செல்​போனில் பேசி​னார். அப்​போது, ‘உங்​களது ஆதார் எண்​ணுடன் இணைக்​கப்​பட்ட பார்​சல் ஒன்​றில் போதைப்​பொருள் இருப்​பதை மும்பை காவல்​துறை கண்​டறிந்​துள்​ளது. எனவே எந்த நேரத்​தி​லும் உங்​களை கைது செய்ய போலீ​ஸார் வரலாம்' என்றார்.

மறு​நாள் ஒரு​வர் தொடர்பு கொண்டு தன்னை மும்பை மாநகர‌ காவல் துணை ஆணை​யர் என அறி​முகப்​படுத்​திக்​கொண்​டு, ‘‘போதைப் பொருள் வழக்​கில் உங்​களை​யும் உங்​கள் 10 வயது மகனை​யும் டிஜிட்டல் கைது செய்ய இருக்​கிறோம். நாங்​கள் கேட்​கும் பணத்தை கொடுத்​தால் வழக்​கில் இருந்து காப்​பாற்​றுகிறோம்'' என பேசி​யுள்​ளார்.

இதையடுத்து மோசடி கும்​பல் போலீ​ஸாரை போல பேசி, அந்த பெண்​ணிடம் ஜூன் 19-ம் முதல் நவம்​பர் 27-ம் தேதிவரை ரூ.2.05 கோடி பணத்தை பறித்​துள்​ளனர்'' என புகார் மனு​வில் குறிப்​பிட்​டுள்​ளார்.

இதுகுறித்து விசா​ரித்த ஒயிட் ஃபீல்ட் சைபர் கிரைம் போலீ​ஸார், தகவல் தொழில்​நுட்​பச் சட்​டத்​தின் பிரிவு​கள் 66(சி), 66(டி) மற்​றும் பார​திய நியாய சன்​ஹிதா சட்ட‌ பிரிவு​கள் 319(2), 318(4) ஆகிய​வற்​றின் கீழ் வழக்​குப் பதிவு செய்​தனர். இதுகுறித்து பல்​வேறு கோணங்​களில் விசா​ரிக்கின்​றனர்.

இதுகுறித்து போலீஸ் அதி​காரி ஒரு​வர் கூறுகை​யில், ‘‘சம்​பந்​தப்​பட்ட பெண்​ணிடம் 22 தவணை​களில் பணத்தை பெற்றுள்ளனர். இதற்​காக விக்​யான் நகரில் உள்ள தனது அடுக்​கு​மாடி குடி​யிருப்பு பிளாட்​டை​யும், மாலூரில் உள்ள இரு வீட்டு மனை​களை​யும் குறைந்த விலைக்கு விற்​றுள்​ளார். வங்​கி​யில் கடன் வாங்​கி​யும்​ பணத்​தைக்​ கொடுத்​துள்​ளார்​'' என்​றார்​.

டிஜிட்டல் கைது மிரட்டல்: பெங்களூரு பெண்ணிடம் ரூ.2 கோடி மோசடி
தமிழக அரசு உயர்கல்வி, ஆராய்ச்சியை மேம்படுத்தி வருகிறது: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பெருமிதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in