

திருமலை: திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்காக டெல்லியைச் சேர்ந்த நயாதி ஹெல்த் கேட் மற்றும் ஆக்ரா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் அதன் சேர்மேன் நீரா ராடியா ரூ.1.13 கோடி மதிப்பிலான பேட்டரி பேருந்தை திருப்பதி தேவஸ்தானத்திற்கு காணிக்கையாக வழங்கினார்.
மேலும், ஏஐ கமாண்ட் கண்ட்ரோல் அறையில் உபயோகிக்க 15 ஆப்பிள் நிறுவன ‘டேப்’-களையும் நன்கொடையாக வழங்கினார். திருமலையில் 20 இலவச பேருந்துகள் உள்ளதாகவும், அதில் 14 எலக்ட்ரிக் பேருந்துகள் எனவும் ‘தர்ம ரதம்’ என பெயரிட்டுள்ள இது, திருமலையில் தினமும் 21 நிறுத்தங்களில் 380 ட்ரிப்கள் இயக்கப்படுகின்றன எனவும் திருப்பதி தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி தெரிவித்தார்.