ம.பி.யில் வசந்த பஞ்சமி பூஜை பலத்த பாதுகாப்புடன் தொடக்கம்

ம.பி.யில் வசந்த பஞ்சமி பூஜை பலத்த பாதுகாப்புடன் தொடக்கம்
Updated on
1 min read

தார்: மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள சர்ச்சைக்குரிய 11-ம் நூற்றாண்டு போஜ்சாலா-கமல் மௌலா மசூதி வளாகத்தில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வசந்த பஞ்சமி பூஜை நேற்று அதிகாலை தொடங்கியது.

இந்த ஆண்டு வசந்த பஞ்சமி விழா வெள்ளிக்கிழமையான நேற்று வந்ததால், அதே வளாகத்தில் வழிபாடு நடத்த இந்து மற்றும் முஸ்லிம் இரு தரப்பினரும் உரிமை கோரினர். இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்படுவதைத் தவிர்க்க, குறிப்பிட்ட நேர ஒதுக்கீடு முறையை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை அறிவித்தது.

அதன்படி, இந்து சமூகத்தினர் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை பூஜைகள் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. முஸ்லிம் சமூகத்தினர் மதியம் 1 மணி முதல் 3 மணி வரை தொழுகை நடத்த அனுமதிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ம.பி.யில் வசந்த பஞ்சமி பூஜை பலத்த பாதுகாப்புடன் தொடக்கம்
Motorola Signature ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in