கேரள மக்கள் மாளிகையில் அசைவ உணவுகளை சமைக்கவும் பரிமாறவும் தடை: ஆளுநர் உத்தரவால் சர்ச்சை

கேரள மக்கள் மாளிகையில் அசைவ உணவுகளை சமைக்கவும் பரிமாறவும் தடை: ஆளுநர் உத்தரவால் சர்ச்சை
Updated on: 
1 min read

திருவனந்தபுரம்: கேரளத்தின் 29-வது ஆளுநராக ஓம் பிரகாஷ் மாதுர் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டார்.

பதவியேற்ற முதல் நாளிலேயே, ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லமான மக்கள் மாளிகை (லோக் பவன்) சமையலறையில், அசைவ உணவுகளைத் தயாரிக்கவும், பரிமாறவும் தடை விதிக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால், ‘‘கேரள மக்கள் வழக்கமாகப் பின்பற்றும் உணவுப் பழக்கங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்திலும், இனி அவர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்று உத்தரவிடும் எண்ணத்திலும் மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த முடிவு தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவதாகும்’’ என்று் கூறியுள்ளார்.

ஆளுநர் அலுவலகம் கூறுகையில், ‘‘சமையலறையில் தயாரிக்கப்படும் உணவுகள் ஆளுநருக்கும் அவரது தனிப்பட்ட பணியாளர்களில் சிலருக்கும் மட்டுமே வழங்கப்படுகிறது. மற்ற ஊழியர்கள் வீட்டிலிருந்து உணவு கொண்டு வருவதிலும், வெளியே உணவருந்துவதிலும் எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மக்கள் மாளிகையில் அசைவ உணவுகளை சமைக்கவும் பரிமாறவும் தடை: ஆளுநர் உத்தரவால் சர்ச்சை
ஜாமியா பல்கலை.யில் அனைத்து வகுப்புகளும் ஆன்லைனுக்கு மாற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in