பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த வழக்கில் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு ஜாமீன் மறுப்பு

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த வழக்கில் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு ஜாமீன் மறுப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: பாகிஸ்​தானின் உளவு நிறுவனம் ஐஎஸ்ஐ, அந்நாட்டு ராணுவத்துக்கு உளவு பார்த்த வழக்​கில் யூடியூபர் ஜோதி மல்​ஹோத்​ரா​வுக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதி​மன்​றம் மறுத்​து​விட்​டது.

பாகிஸ்​தானுக்கு உளவு பார்த்​த​தாக ஹரி​யானா மாநிலம், ஹிஸாரை சேர்ந்த யூ டியூபர் ஜோதி மல்​ஹோத்ரா கடந்​தாண்டு மே 16-ம் தேதி கைது செய்​யப்​பட்​டார். இந்த வழக்​கில் ஓராண்டுக்கு மேல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ள ஜோதி மல்​ஹோத்ரா பஞ்​சாப்​-ஹரி​யானா உயர் நீதி​மன்​றத்​தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்​தார். இந்த மனு கடந்த மார்ச் 7-ம் தேதி தள்​ளு​படி செய்யப்​பட்​டது.

இதை எதிர்த்து ஜோதி மல்​ஹோத்ரா சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இந்த ஜாமீன் மனுவை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் தீபாங்​கர் தத்​தா, சதீஷ் சந்​திர சர்மா அடங்​கிய அமர்வு நேற்று விசா​ரித்​தது.

ஜோதி மல்​ஹோத்ரா சார்​பில் சார்​பில் ஆஜரான வழக்​கறிஞர் சர்​வேஷ் குமார் யாதவ் கூறும்​போது, “கடந்த ஆண்டு மே 16-ம் தேதி கைது செய்​யப்​பட்ட ஜோதி ஓராண்​டுக்​கும் மேலாக சிறை​யில் உள்​ளார். எவ்​வித குற்ற வழக்​கு​களி​லும் தொடர்பு இல்​லாத அவருக்கு ஜாமீன் வழங்க வேண்​டும்”என்று வாதிட்​டார். இதற்கு அரசு தரப்பு வழக்​கறிஞர் கடும் ஆட்​சேபம் தெரி​வித்​தார்.

இருதரப்பு வாதங்​களை கேட்ட பிறகு நீதிப​தி​கள் கூறும்​போது “தேசப் பாது​காப்​பில் சமரசம் என்​பதே கிடை​யாது. மனு​தா​ரர் ஜோதி அண்டை நாட்​டுக்கு (பாகிஸ்​தான்) சென்​ற​தாக குற்​றம் சாட்​டப்​பட்டு உள்​ளது. நாட்டை விட்டு வெளி​யேற உத்​தர​விடப்​பட்ட நபருடன் அவர் தொடர்​பில் இருந்​துள்​ளார். அவர் வழக்கு விசா​ரணை​யைச் சந்​திக்க வேண்​டும். மேல்​முறை​யீட்டு மனு தள்​ளு​படி செய்​யப்​படு​கிறது” என்​று உத்​தரவிட்​டனர்​.

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த வழக்கில் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு ஜாமீன் மறுப்பு
ராம்ராஜ் காட்டன் வழங்கும் ‘இந்து தமிழ் திசை - அன்பாசிரியர்’ விருது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in