ராம்ராஜ் காட்டன் வழங்கும் ‘இந்து தமிழ் திசை - அன்பாசிரியர்’ விருது

ராம்ராஜ் காட்டன் வழங்கும் ‘இந்து தமிழ் திசை - அன்பாசிரியர்’ விருது
Updated on
1 min read

சென்னை: ராம்​ராஜ் காட்​டன் வழங்​கும் ‘இந்து தமிழ் திசை - அன்பாசிரியர்’ விருதுகளை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்​கப் பெரு​மை​யுடன் காத்​திருக்​கிறது.

மாணவர்​களுக்கு வழக்​க​மான பாடம் கற்​பிப்​ப​தோடு நின்​று வி​டா​மல், மாறு​பட்ட சிந்​தனையோடும், புதுமை உணர்​வோடும் மாணவர்​களின் திறன்​களை வளர்த்​து, சமூக அக்​கறை ஊட்​டி, நற்​பண்​பு​களைப் போதித்​து, பள்​ளியை​யும் மேம்​படுத்​தும் அர்ப்​பணிப்பு மிக்க ஆசிரியர்​களுக்​காகவே இந்த ‘அன்​பாசிரியர்’ விருது வழங்​கப்​படு​கிறது. இதை ராஜலட்​சுமி இன்​ஜினீயரிங் கல்லூரி இணைந்து வழங்​கு​கிறது. பொன்​வண்டு டிடர்​ஜென்ட் நிறு​வனம் பங்​கு​தா​ர​ராக இணைந்​துள்​ளது.

தமிழ்​நாடு, புதுச்​சேரியைச் சேர்ந்த அரசு மற்​றும் அரசு உதவிபெறும் பள்​ளி​கள், மெட்​ரி​குலேசன் பள்​ளி​களில் சிறப்​பாகப் பணி​யாற்​றும் ஆசிரியர்​கள், தொடர்ச்​சி​யாகக் கற்​பித்துவரும் தலைமை ஆசிரியர்​களும் இந்த விருதுக்கு விண்​ணப்பிக்​கத் தகுதி​யானவர்​களாவர். ஏற்கெனவே ‘இந்து தமிழ் திசை’ வழங்​கிய ‘அன்​பாசிரியர்’ விருது, மாநில, மத்​திய அரசு வழங்​கும் நல்லாசிரியர் விருது பெற்​றவர்​கள், சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் உள்​ளிட்​டோர் தயவு​கூர்ந்து விண்ணப்​பிக்க வேண்​டாம். இந்த விருதுக்கு இணை​யம் வழி​யாக மட்​டுமே விண்​ணப்​பிக்க வேண்டும்.

என்ன செய்ய வேண்​டும்?

இத்​துடன் கொடுக்​கப்​பட்டுள்ள க்யூஆர் குறி​யீட்டை ஸ்கேன் செய்து, அதி​லுள்ள விண்​ணப்​பப் படிவத்​தின் மூல​மாக பதிவு செய்யுங்​கள். அதனுடன் சுயவிவரக் குறிப்​பு, சாதனைகள் அடங்கிய புகைப்​படங்​கள் / வீடியோக்​கள், ஊடக அங்​கீ​காரங்கள், ஆசிரியரின் நன்​முயற்சிகளுக்குப் பிறகு மாணவர்​களின் செயல்​பாடு​களில் ஏற்​பட்ட முன்​னேற்​றம் ஆகிய​வற்​றுக்​கான ஆதாரங்களை​யும் விண்​ணப்​பப் படிவத்​தோடு சேர்த்து அனுப்புங்கள்.

தேர்வு செய்​யப்​பட்ட ஆசிரியர்களுக்​கான நேர்​காணல் ஆன்​லைனில் நடை​பெறும். மூத்த கல்​வி​யாளர்​கள், பேராசிரியர்கள், சமூக சிந்​தனை​யாளர்​கள் அடங்​கிய குழு​வினர் ஆன்​லைன் நேர்​காணலை நடத்​து​வார்​கள்.

தங்​களது சாதனை சான்​றிதழ்​கள், புகைப்​படங்​கள், வீடியோக்​கள், பிற விவரங்​களு​டன் ஆன்​லைன் நேர்​காணலில் ஆசிரியர்​கள் பங்​கேற்க வேண்​டும். தமிழகத்​தி​லுள்ள 38 மாவட்​டங்​கள் மற்​றும் புதுச்​சேரி, காரைக்​கால் 2 மாவட்​டங்​கள் என 40 மாவட்​டங்​களை சேர்ந்த ஆசிரியர்​களுக்கு அன்​பாசிரியர் விருதுகள் வழங்​கப்​பட​வுள்​ளன.

ஜூலை 5-க்​குள் இத்​துடன் உள்ள க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து விண்​ணப்​பிக்க வேண்​டும். கூடு​தல் தகவல்​களுக்கு மு.​முருகேசன் - 7401329364 என்ற செல்​பேசி எண்​ணில் அல்லது murugesan.m@hindu tamil co.in என்ற மின்னஞ்​சல் வழி​யாக தொடர்பு கொள்​ளலாம்​.

ராம்ராஜ் காட்டன் வழங்கும் ‘இந்து தமிழ் திசை - அன்பாசிரியர்’ விருது
‘சிங்கப்பெண்’ படையை விரைவில் அமைக்க பிரேமலதா வேண்டுகோள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in