மேற்கு வங்க வாக்காளர்கள் கருத்து சொல்ல மறுப்பு: ஆக்சிஸ் மை இந்தியா தகவல்

மேற்கு வங்க வாக்காளர்கள் கருத்து சொல்ல மறுப்பு: ஆக்சிஸ் மை இந்தியா தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: மேற்கு வங்கத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை பல நிறுவனங்கள் வெளியிட்டன. இதில் சில நிறுவனங்கள் பாஜக.,வுக்கு வெற்றி வாய்ப்பு என்றும், சில திரிணமூல் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு எனவும் கருத்துக் கணிப்பை வெளியிட்டன.

இந்நிலையில், மற்ற மாநிலங்களின் தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிட்ட ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் மேற்கு வங்கத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட மாட்டோம் என அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனர் பிரதீப் குப்தா கூறியதாவது: மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவை தொகுதிகளிலும் பயிற்சி பெற்ற 80 சர்வேயர்கள் மூலம் கருத்து கணிப்பு தகவலை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டோம்.

ஆனால், அந்தப் பணி சவாலாக இருந்தது. சுமார் 70% வாக்காளர்கள், தாங்கள் யாருக்கும் வாக்களித்தோம் என்ற தகவலை தெரிவிக்க மறுத்துவிட்டனர். சிலர் தயக்கத்துடன் கூறினர். இதனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட வேண்டாம் என முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேற்கு வங்க வாக்காளர்கள் கருத்து சொல்ல மறுப்பு: ஆக்சிஸ் மை இந்தியா தகவல்
மேற்கு வங்கத்தில் 77 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துவது பற்றி ஆலோசனை?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in