“ஒரு முன்மாதிரி நடவடிக்கையாக இருக்கும்” - இண்டிகோ விவகாரத்தில் மத்திய அரசு உறுதி!

ராம் மோகன் நாயுடு | கோப்புப் படம்

ராம் மோகன் நாயுடு | கோப்புப் படம்

Updated on
1 min read

புதுடெல்லி: “அரசின் விதிகளை பின்பற்றாத எந்தவொரு விமான நிறுவனம் மீதும் நாங்கள் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுப்போம். நாங்கள் எடுக்கும் நடவடிக்கை ஒவ்வொரு விமான நிறுவனத்திற்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கும். பயணிகளின் பாதுகாப்பில் எந்த சமரசமும் இருக்காது” என்று மாநிலங்களவையில் பேசிய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு கூறினார்.

விமானிகள் பற்றாக்குறை மற்றும் பல்வேறு காரணங்களால் நாட்டின் மிகப்பெரிய இண்​டிகோ விமான நிறுவன சேவை கடந்த ஒரு வாரமாக கடுமை​யாக பாதித்தது. இதனால் 2 ஆயிரத்​துக்கு மேற்​பட்ட விமான சேவை​கள் ரத்து செய்​யப்​பட்​டன. இதனால் பயணி​கள் கடும் சிரமத்​துக்கு ஆளாகினர். பாதிக்கப்பட்ட விமான செயல்பாடுகளை மீட்டெடுக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் இன்று மாநிலங்களவையில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு பேசுகையில், “நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கும், ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கித் தவிப்பதற்கும் வழிவகுத்த குழப்பம், புதிய பயணிகள் பாதுகாப்பு விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு இண்டிகோ நிறுவனத்தில் ஏற்பட்ட உள் நெருக்கடியின் விளைவாகும்.

விமானிகள் மற்றும் பயணிகள் மீது நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். இதனை அனைத்து விமான நிறுவனங்களுக்கும் நாங்கள் தெளிவுபடுத்தினோம். இண்டிகோ நிறுவனம் விமானக் குழுவினர் மற்றும் பணியாளர் பட்டியலை நிர்வகிக்க வேண்டும். பயணிகள் நிறைய சிரமங்களை எதிர்கொண்டனர். நாங்கள் இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. நாங்கள் இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுப்போம்.

நாங்கள் எடுக்கும் நடவடிக்கை ஒவ்வொரு விமான நிறுவனத்திற்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கும். இந்த விஷயத்தில் ஏதேனும் மீறல்கள் இருந்தால், நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இந்த விஷயத்தில் அரசாங்கம் முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளது.

மென்பொருள் பிரச்சினை குறித்தும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்தத் துறையில் தொடர்ச்சியான தொழில்நுட்ப மேம்பாடு நடைபெறுகிறது. நாட்டில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு உலகளாவிய தரநிலைகளை வழங்குவதே அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையாகும்.

இண்டிகோவில் உள்ள சிக்கல்கள் பணியாளர் பட்டியல் மற்றும் உள் செயல்பாட்டுத் திட்டமிடலுடன் தொடர்புடையவை. இதை விமான நிறுவனம் தினசரி அடிப்படையில் நிர்வகிக்க வேண்டும். FTTL வழிகாட்டுதல்கள் தொடர்பாக அனைத்து நிறுவனங்களுடனும் முழுமையான ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பில் எந்த சமரசமும் இருக்காது. அரசின் விதிகளை பின்பற்றாத எந்தவொரு நிறுவனம் மீதும் நாங்கள் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுப்போம்.” என்று அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>ராம் மோகன் நாயுடு | கோப்புப் படம்</p></div>
“வந்தே மாதரம்... எந்த கட்சிக்கும் சொந்தமானது அல்ல!” - மக்களவையில் அகிலேஷ் யாதவ் ஆவேசம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in