சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் திட்டமிடப்பட்ட அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் குற்றச்சாட்டு

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் திட்டமிடப்பட்ட அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் குற்றச்சாட்டு
Updated on
1 min read

சண்டிகர்: சிரோமணி அகாலி தளம் கட்​சித் தலை​வர் சுக்பீர் சிங் பாதல் மீது நடத்​தப்​பட்ட தாக்​குதல் நன்கு திட்​ட​மிடப்​பட்ட அரசியல் சதி என்​றும், இதில் ஈடு​பட்​ட​வர்​கள் உண்​மை​யான சீக்கியர்​கள் அல்ல என்​றும் அவரது மனை​வி​யும், எம்​.பி.​யு​மான ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

மகா​ராஷ்டி​ரா​வின் நாந்​தேட் குருத்​வா​ரா​வில் கடந்த வியாழக்கிழமை பிரார்த்​தனை​யில் ஈடு​பட்​டிருந்த பஞ்​சாப் முன்னாள் துணை முதல்​வர் சுக்​பீர் சிங் பாதல் மீது, ‘நிஹாங்’ பிரிவைச் சேர்ந்த நபர் ஒரு​வர் ‘கிர்​பான்’ (சீக்​கியர்​களின் புனிதவாள்) கொண்டு தாக்​குதல் நடத்​தி​னார். இந்​தத் தாக்​குதலில் சுக்​பீர் சிங் பாதலின் வலது கையில் காயம் ஏற்​பட்​டது. சம்பவ இடத்​திலேயே தாக்​குதல் நடத்​திய நபரை காவல் துறை​யினர் கைது செய்​தனர்.

முதலுதவிக்​குப் பின் நாந்​தேட் மருத்​து​வ​மனையி​லிருந்து கடந்த வெள்​ளிக்​கிழமை டிஸ்​சார்ஜ் செய்​யப்​பட்ட பாதல், அறுவை சிகிச்சைக்​காக குரு​கி​ராமில் உள்ள மேதாந்தா மருத்​து​வ​மனையில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார்.

பஞ்​சாபின் கன்னா பகு​தி​யில் உள்ள இஸ்ரு கிராமத்​தில், கோவா விடு​தலைப் போராட்​டத் தியாகி கர்​னைல் சிங் இஸ்​ரு​வின் நினைவாக அமைக்​கப்​பட்ட மாநாட்​டில் பங்​கேற்ற ஹர்​சிம்​ரத் கவுர் பாதல் பேசி​ய​தாவது: “கடந்த 48 மணி நேரம் எனக்​கும், எனது குடும்​பத்​துக்​கும் மிக​வும் கடின​மாக இருந்​தது. இந்த மாநாட்​டில் சுக்​பீர் தான் பங்​கேற்​றிருக்க வேண்​டும். ஆனால், அவருக்கு என்ன செய்​திருக்​கிறார்​கள் என்​ப​தைப் பாருங்​கள்.

பஞ்​சாபின் அமை​திக்​காக​வும், செழிப்​புக்​காக​வும் சீக்​கியர்​களின் புனித​மான தலங்​களில் ஒன்​றில் பிரார்த்​தனை செய்து கொண்டிருந்​த​போதே அவர் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டுள்​ளது. தாக்​குதல் நடத்​தி​ய​வர் ஒரு​போதும் சீக்​கிய​ராக இருக்க முடி​யாது; அவர் ஒரு ‘குரு தோகி’ (குரு​வுக்​குத் துரோகம் செய்​தவர்).

இரண்டு ஆண்​டு​களில் சுக்​பீர் மீது நடத்​தப்​பட்ட இந்த 2-வது தாக்குதல் பஞ்​சாபில் அமை​தி​யைக் குலைப்​ப​தற்​காக 2015 முதல் தீட்​டப்​பட்டு வரும் அரசி​யல் சதி​யின் ஒரு பகு​தி.

உறுதியை குலைக்க முடியாது

பஞ்​சாபில் அமை​தியை ஏற்​படுத்த அகாலி தளம் முயலும் போதெல்​லாம், சிலர் வெறுப்​பைப் பரப்​பப் பார்க்​கிறார்​கள். ஆனால், அவர்​களின் முயற்சி சுக்​பீ்ரின் உறு​தியை அசைக்க முடியாது. இப்​போது எனக்​குப் பதிலாக மக்​கள் பணி​யைச் செய் என்று கூறி அவர் என்னை அனுப்பி வைத்​துள்​ளார். இதுவே பஞ்சாப் மக்​கள் மீது அவர் வைத்​துள்ள உண்​மை​யான அன்பு ஆகும். இவ்​வாறு ஹர்​சிம்​ரத் கவுர் பாதல் பேசி​யுள்​ளார்.

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் திட்டமிடப்பட்ட அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் குற்றச்சாட்டு
மக்கள் வரிப்பணத்தில் இலவச ரோடு ஷோ நடத்தித் தந்த அரசு: கைது நடவடிக்கை குறித்து உதயநிதி விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in