மகரமேளாவில் பெண் துறவிகள் மீது தாக்குதல்: உ.பி. காவல் துறைக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

மகரமேளாவில் பெண் துறவிகள் மீது தாக்குதல்: உ.பி. காவல் துறைக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்
Updated on
1 min read

புதுடெல்லி: மகரமேளா​வில் பெண் துறவி​கள் தாக்​கப்​பட்​ட​தாகத் தகவல் வெளி​யானதைத் தொடர்ந்​து, உ.பி. காவல் துறைக்கு தேசிய மகளிர் ஆணை​யம் நோட்​டீஸ் அனுப்பி உள்​ளது.

உ.பி.​யின் பிர​யாக்​ராஜ் திரிவேணி சங்​கமத்​தில் மகர மேளா நடை​பெற்று வரு​கிறது. இங்கு கடந்த மவுனி அமா​வாசை தினத்​தில் புனித குளியலின் போது உத்​த​ராகண்​டின் ஜோதிஷ்வர் பீடத்​தின் சங்​க​ராச்​சா​ரி​யார் சுவாமி அவி​முக்​தேஷ்வ​ரானந்​தா​வும் புனித நீராட கிளம்​பி​னார்.

அப்​போது பல்​லக்​கில் சென்​றவரை இறங்கி நடந்து செல்​லு​மாறு உ.பி. நிர்​வாகம் வலி​யுறுத்​தி​யது. சங்​க​ராச்​சா​ரி​யார் பட்​டம் தொடர்​பான வழக்கு நீதி​மன்​றத்​தில் இருப்​ப​தால் அந்த உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​ட​தாக காவல் துறை​யினர் கூறினர். இதனால் காவலர்​களுக்​கும் சங்​க​ராச்​சா​ரி​யாரின் பக்​தர்​களுக்​கும் இடையே வாக்​கு​வாத​மும் மோதலும் நிகழ்ந்​தன.

அதில், சங்​க​ராச்​சா​ரி​யாரின் பக்​தர்​கள் பெண் துறவி​களும் தாக்​கப்​பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது. சுமார் 20 பெண் துறவி​கள் மீது காவல் துறை​யினர் தாக்​குதல் நடத்​தி​ய​தாக புகார் எழுந்​தது. காயம் அடைந்த சிலர் மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை பெற்​றுள்​ளனர்.

பாதிக்​கப்​பட்ட பெண் துறவி​களில் பூஜா (40), ஜெய்​தேவி பாண்டே (50), அர்ச்​சனா தேவி (61), மம்தா பரோஹா (60), கமலா பரத்​வாஜ் (60), ஜோதி கார்க்​(39), ஸ்வேதா சுக்லா (25) ஆகியோர் முக்​கிய​மானவர்​கள்.

இதுதொடர்​பாக அலகா​பாத் உயர் நீதி​மன்ற வழக்​கறிஞர் டாக்​டர் கஜேந்​திர சிங் யாதவ், தேசிய மகளிர் ஆணை​யத்​தில் புகார் செய்​தார்.

இதையடுத்​து, பெண் துறவி​கள் தாக்​கப்​பட்​டது குறித்து விசா​ரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று பிர​யாக்​ராஜ் காவல் துறை ஆணை​யருக்கு மகளிர் ஆணை​யம் நோட்​டீஸ அனுப்பி உள்​ளது. அதில், 30 நாட்​களுக்​குள் நடவடிக்கை எடுத்து பதில் அளிக்க வேண்​டும் என்று கூறப்​பட்​டுள்​ளது.

முன்​ன​தாக உ.பி. காவல் துறை​யினர் மீது நடவடிக்கை கோரி சங்​க​ராச்​சா​ரி​யாரும் மகர மேளா​வில் தர்ணா நடத்​தி​னார். எந்த நடவடிக்​கை​யும் எடுக்​காத​தால் அடுத்து வந்த புனிதக் குளியல்​களை​யும் புறக்​கணித்து விட்டு சங்​க​ராச்​சா​ரி​யார் அவி​முக்​தேஷ்வர்​ மகர மேளா​வில்​ இருந்​து வெளியேறி​னார்​.

மகரமேளாவில் பெண் துறவிகள் மீது தாக்குதல்: உ.பி. காவல் துறைக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்
T20 WC 2026: ஹெட்மயர் அதிரடி, ரோமாரியோ ஹாட்ரிக் - மே.இ.தீவுகள் வெற்றி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in