T20 WC 2026: ஹெட்மயர் அதிரடி, ரோமாரியோ ஹாட்ரிக் - மே.இ.தீவுகள் வெற்றி

T20 WC 2026: ஹெட்மயர் அதிரடி, ரோமாரியோ ஹாட்ரிக் - மே.இ.தீவுகள் வெற்றி
Updated on
2 min read

கொல்கத்தா: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘சி’ பிரி​வில் உள்ள இரு முறை சாம்​பிய​னான மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி தனது முதல் லீக் ஆட்​டத்​தில் நேற்று ஸ்காட்​லாந்​துடன் மோதி​யது. கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 182 ரன்​கள் குவித்​தது.

அதி​கபட்​ச​மாக ஷிம்​ரன் ஹெட்​மயர் 36 பந்​துகளில், 6 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 64 ரன்​கள் விளாசி​னார். முன்​ன​தாக அவர், தனது அரை சதத்தை 22 பந்​துகளில் கடந்​திருந்​தார். தொடக்க வீர​ரான பிரண்​டன் கிங் 35, கேப்​டன் ஷாய் ஹோப் 19, ரோவ்​மன் பவல் 24, ஷெர்ஃபேன் ரூதர்​போர்டு 26, ரோமாரியோ ஷெப்​பர்டு 6 ரன்​கள் சேர்த்​தனர். ஸ்காட்​லாந்து அணி தரப்​பில் பிராடு பிராட் கர்ரி 2 விக்​கெட்​கள் கைப்​பற்​றி​னார்.

பவர்​பிளே​வில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 4 பவுண்​டரி​களு​டன் விக்​கெட் இழப்​பின்றி 33 ரன்​கள் மட்​டுமே சேர்த்​திருந்​தது. 17 பந்​துகளில் ரன்​கள் சேர்க்​கப்​பட​வில்​லை. தொடர்ந்து 10 ஓவர்​களின் முடி​வில் அந்த அணி 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 66 ரன்​கள் எடுத்​திருந்​தது. இதன் பின்​னர் ஷிம்​ரன் ஹெட்​மயர் அதிரடி​யாக விளை​யாடி​னார். இதனால் 11 முதல் 15 ஓவர்​கள் வரையி​லான கட்​டத்​தில் மட்​டும் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 72 ரன்​களை குவித்து மிரட்​டியது. இதனாலேயே அந்த அணி வலு​வான இலக்கை கொடுக்க முடிந்​தது.

183 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஸ்காட்​லாந்து அணி 18.5 ஓவர்​களில் 147 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக கேப்​டன் ரிச்சி பெரிங்​டன் 24 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 42 ரன்​கள் சேர்த்​தார். டாம் புரூஸ் 35, ஜார்ஜ் முன்ஸி 19, மார்க் வாட் 15, பிரண்​டன் மெக்​முல்​லன் 14 ரன்​கள் சேர்த்​தனர். மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி சார்​பில் ரோமாரியோ ஷெப்​பர்டு 3 ஓவர்​களை வீசி 20 ரன்​களை வழங்கி 5 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார்.

ரோமாரியா ஷெப்​பர்டு கைப்​பற்​றிய 5 விக்​கெட்​களில் ஹாட்​ரிக் சாதனை​யும் அடங்​கும். அவர், வீசிய 17-வது ஓவரில் ஸ்காட்​லாந்து அணி​யின் பின்​வரிசை பேட்​ஸ்​மேன்​களான மேத்யூ கிராஸ் (11), மைக்​கேல் லீஸ்க் (0), ஆலிவர் டேவிட்​சன் (0) ஆகியோரை அடுத்​தடுத்த பந்​துகளில் ஆட்​ட​மிழக்​கச் செய்து ஹாட்​ரிக் சாதனை படைத்​தார்.

ஜேசன் ஹோல்​டர் 3 விக்​கெட்​களை​யும், ஷமர் ஜோசப், குடகேஷ் மோட்டி ஆகியோர் தலா ஒரு விக்​கெட்​டை​யும் கைப்​பற்​றினர். 35 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 2 புள்​ளி​களை பெற்​றது. ஆட்ட நாயக​னாக ஷிம்​ரன் ஹெட்​மயர் தேர்​வா​னார்.

ஜேசன் ஹோல்​டர் 100: ஜேசன் ஹோல்​டர் இந்த ஆட்டத்​தில் 2-வது விக்​கெட்டை கைப்​பற்​றிய போது சர்​வ​தேச டி 20 போட்​டிகளில் 100 விக்​கெட்​களை வீழ்த்​திய முதல் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் வீரர் என்ற மைல் கல் சாதனையை படைத்​தார்.

T20 WC 2026: ஹெட்மயர் அதிரடி, ரோமாரியோ ஹாட்ரிக் - மே.இ.தீவுகள் வெற்றி
India-US deal | அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு அனுமதி இல்லை: பியூஷ் கோயல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in