சிஆர்பிஎப் முகாம் மீது தாக்குதல்: 2 தீவிரவாதி என்கவுன்ட்டரில் உயிரிழப்பு

சிஆர்பிஎப் முகாம் மீது தாக்குதல்: 2 தீவிரவாதி என்கவுன்ட்டரில் உயிரிழப்பு
Updated on: 
1 min read

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குல்​காமில் கடந்த வாரம் சிஆர்பிஎப் முகாம் மீது தாக்குதல் நடத்​தி​ய​தாக கூறப்​படும் லஷ்​கர் தீவிரவாதி லத்​தீப் பட் உள்ளிட்ட இருவர் பாது​காப்​புப் படையினருடனான என்​கவுன்ட்​டரில் உயி​ரிழந்​தனர்.

கடந்த நவம்​பர் 11 அன்று குல்​காமில் உள்ள மிர் பஜார் பகுதி​யில் சிஆர்​பிஎப் முகாம் மீது, அதிநவீன ஆயுதங்​களு​டன் வந்த இரண்டு தீவிர​வாதி​கள் துப்​பாக்​கிச் சூடு நடத்​தினர். இதில் மூன்று வீரர்​கள் காயமடைந்​தனர்.

இவர்​களில் ஒரு​வரின் நிலை கவலைக்​கிட​மாக உள்​ளது. தாக்குதலுக்​குப் பிறகு தீவிர​வாதி​கள் வனப்​பகுதிக்​குள் தப்​பிச் சென்​றனர். இச்​சம்​பவத்​தில் தொடர்​புடைய லத்​தீப் பட், உமர் ஆகிய இரண்டு தீவிர​வாதி​களும் சுற்​றிவளைக்​கப்​பட்டு என்​கவுன்ட்​டர் நடந்து வரு​கிறது என்று ஜம்மு காஷ்​மீர் போலீ​ஸார் எக்ஸ் பக்​கத்​தில் தெரி​வித்​துள்​ளனர்.

இதில் தேடப்பட்டு வந்த லத்தீப் பட் உள்ளிட்ட இரண்டு தீவிரவாதிகளும் கொல்​லப்​பட்​டுள்​ளதாக கூறப்படுகிறது. என்கவுன்ட்டர் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அனைத்தும் முடிந்தபிறகே ராணுவம் தரப்பில் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

சிஆர்பிஎப் முகாம் மீது தாக்குதல்: 2 தீவிரவாதி என்கவுன்ட்டரில் உயிரிழப்பு
நகைக்கடை கொள்ளையன் நிஷாந்த் மதுரை தனிப்படையிடம் ஒப்படைப்பு: தருமபுரியில் சுற்றிவளைத்து கைது

X