ஆம்புலன்ஸை நிறுத்தி வாகன அணிவகுப்பு: நோயாளி குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்ட அசாம் முதல்வர்

ஆம்புலன்ஸை நிறுத்தி வாகன அணிவகுப்பு: நோயாளி குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்ட அசாம் முதல்வர்
Updated on: 
1 min read

குவாஹாட்டி: அசாம் முதல்​வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தனது ‘எக்​ஸ்’ பக்​கத்​தில் வெளி​யிட்ட பதி​வில் குறிப்​பிட்​டுள்​ள​தாவது: சில்​சார் நகரில் இன்று (நேற்று) எனது வாகன அணிவகுப்​புக்கு வழி​விடு​வதற்​காக ஆம்​புலன்ஸ் நிறுத்​தப்​பட்​டது. இது ஏற்​றுக்​கொள்ள முடி​யாதது. இதற்​காக, அந்த ஆம்​புலன்ஸ் வாக​னத்​தில் இருந்த நோயாளி மற்​றும் அவரது குடும்​பத்​தினரிடம் மன்​னிப்பு கேட்​டுக் கொள்​கிறேன். அவசர சிகிச்சை தேவைப்​படும் ஒரு​வரின் உயிரை​விட எந்த முதல்​வரின் பயணத்​துக்​கும் ஒரு​போதும் முன்​னுரிமை அளிக்​கக் கூடாது.

மேலும், விஐபி வாகன அணிவகுப்பு காரண​மாக சாதாரண பொது​மக்​களுக்கு இடையூறு ஏற்​படக் கூடாது என்​பது தொடர்​பாக எனது உத்​தரவு தெளி​வாக உள்​ளது. அந்த உத்​தரவு நடை​முறைப்​படுத்​தப்​ப​டாதது மிக​வும் கவலைக்​குரியது. இதற்கு காரண​மானவர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​க​வும், விசா​ரணை நடத்​த​வும், சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களிடம் கேட்​டுக்​கொண்​டுள்​ளேன்.

முதல்​வரின் வாகன அணிவகுப்பு தொடர்​பான உத்​தர​வு​கள் முழு​மை​யாக​வும், எந்​த​வித விலக்​குமின்​றி​யும் அமல்​படுத்​தப்​படும் என்​ப​தற்​கான தெளி​வான எச்​சரிக்​கை​யாக இது இருக்​கட்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார். இதற்​கிடையே, இச்​சம்​பவம் தொடர்​பாக, பணி​யில் இருந்த 4 போலீ​ஸாரை மாநில அரசு உடனடி​யாக பணி​யிடை நீக்​கம் செய்​துள்​ளது.

முதல் முறை அல்ல: இதற்கு முன்பு கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதத்​தில், தனது வாகன அணிவகுப்​புக்​காக போக்​கு​வரத்தை நிறுத்​தி​யதற்​காக, நாகான் மாவட்ட துணை ஆட்​சி​யர் நிசார்க் ஹிவாரேவை முதல்​வர் ஹிமந்த பிஸ்வ சர்மா பொது​வெளி​யில் கண்​டித்​தார்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

ஆம்புலன்ஸை நிறுத்தி வாகன அணிவகுப்பு: நோயாளி குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்ட அசாம் முதல்வர்
ரியாத்தில் நடந்த விழாவில் சவுதி பாரம்பரிய நடனம் ஆடிய சீன ரோபோக்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in