இந்தியர்களை அடிமைத் தொழிலாளர்கள் என்பதா? - அமெரிக்கத் துணை அதிபரின் விமர்சனத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு

இந்தியர்களை அடிமைத் தொழிலாளர்கள் என்பதா? - அமெரிக்கத் துணை அதிபரின் விமர்சனத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு
Updated on: 
1 min read

புதுடெல்லி: எச்​-1பி விசா பணி​யாளர்​களை அடிமைத் தொழிலாளர்கள் என ஜே.டி.​வான்ஸ் குறிப்​பிட்​டதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து வெளி​யுறவு அமைச்​சகம் கூறிய​தாவது: அமெரிக்​க துணை அதிபர் ஜே.டி. வான்​ஸ், அமெரிக்க நிறு​வனங்​கள் குறைந்த ஊதி​யத்​திற்கு வெளி​நாட்​டுப் பணி​யாளர்​களைப் பணிக்கு அமர்த்தி அமெரிக்க ஊழியர்​களைப் பணிநீக்​கம் செய்வதாகக் குற்​றம் சாட்​டி​யுள்ளார். அப்​போது அவர் எச்​-1பி விசா பணி​யாளர்​களை அடிமைத் தொழிலா​ளர்​கள் என்ற கருத்தை தெரி​வித்​தது கடும் கண்​டனத்​துக்​குரியது. இத்​தகைய கருத்​துக்​கள் தேவையற்​றவை என்​பதுடன் அவர் பயன்​படுத்​திய சொற்​கள் மிக​வும் புண்​படுத்​தும் வகை​யில் அமைந்​துள்​ளன.

அமெரிக்​கா​வில் உள்ள இந்​திய வல்​லுநர்​கள் உயர்​கல்வி கற்றவர்கள். அமெரிக்​கப் பொருளா​தா​ரம் மற்​றும் கண்டுபிடிப்புகளுக்கு பெரும் பங்​காற்றி வரு​கின்​றனர். வேதனை அளிக்​கிறது. துணை அதிபரின் கருத்​துக்​கள் அவரின் பங்​களிப்பை புறக்​கணிப்​ப​தாக உள்​ளன. அமெரிக்​கா​வின் வளர்ச்சியும் செழிப்​பும் தலை​முறை தலை​முறை​யாக வந்த குடியேறிகளின் உழைப்​பால் உரு​வானது.

வரலாற்று ரீதி​யாக வலிமிகுந்த காலனித்​து​வக் காலத்​தைக் குறிக்கும் சொற்​களைப் பயன்​படுத்​து​வது வேதனையளிக்​கிறது. தொழில் வல்​லுநர்​களின் இடப்​பெயர்வு இரு நாடு​களின் பொருளா​தா​ரத்​துக்கும் நன்மை பயக்​கும். மேலும், "நிரந்​தரப் பணிச் சான்றிதழ்" இடைநிறுத்​தம் என்​பது எ-1பி விசா நடைமுறையிலிருந்து வேறு​பட்​டது. தற்​போதைய எச்​-1பி விசா தாரர்​களுக்கு இதனால் பாதிப்​பு இல்லை. இவ்​வாறு வெளி​யுறவு அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது.

8 நிறு​வனங்​களுக்​குத் தடை

ட்ரம்ப் நிர்​வாகம், நிரந்​தரப் பணிச் சான்​றிதழ் திட்​டத்​தில் பங்​கேற்​ப​திலிருந்து 8 முக்​கிய ஐடி நிறு​வனங்​களுக்​குத் தற்​காலிகத் தடை விதித்​துள்​ளது. இதில், இந்​தி​யா​வின் டிசிஎஸ், இன்​போசிஸ், விப்​ரோ, ஹெச்​சிஎல் டெக், காக்​னிசண்ட், அமெரிக்​கா​வின் மைக்​ரோ​சாப்ட், அடோப், கேப்​ஜெமினி நிறு​வனங்​களும் அடக்​கம். அமெரிக்கத் தொழிலா​ளர் துறை நிரந்​தரப் பணிச் சான்​றிதழ் திட்டத்​தின்கீழ் புதிய விண்​ணப்​பங்​களை ஏற்​ப​தை​யும் பரிசீலிப்​ப தை​யும் நிறுத்​தி​யுள்​ளது. ஆண்​டு​தோறும் வழங்​கப்​படும் எச்​-1பி விசா ஒப்​புதல்​களில் 70 சதவீதத்​துக்கும் அதி​க​மானவை இந்​திய வல்​லுநர்​களுக்கே கிடைக்​கின்​றன என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

எந்தப் பாதிப்பும் இல்லை – டிசிஎஸ்

அமெரிக்க அரசின் இந்த முடிவால் நிறுவனத்தின் பணியாளர்கள் அமைப்பிலோ அல்லது வாடிக்கையாளர் திட்டங்களிலோ எந்தப் பாதிப்பும் ஏற்படாது என இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ளூர் திறமையாளர்களைப் பணிக்கு அமர்த்துவதற்கே நிறுவனம் முன்னுரிமை அளிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் டிசிஎஸ் தாக்கல் செய்த பெர்ம் விண்ணப்பங்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே இருந்தது. எனவே, இந்தத் தடை நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பாதிக்காது என்று டிசிஎஸ் தெரிவித்துள்ளது.

இந்தியர்களை அடிமைத் தொழிலாளர்கள் என்பதா? - அமெரிக்கத் துணை அதிபரின் விமர்சனத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு
தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்கக் கோரி குடியரசுத் தலைவரிடம் இண்டியா கூட்டணி மனு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in