தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்கக் கோரி குடியரசுத் தலைவரிடம் இண்டியா கூட்டணி மனு

தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்கக் கோரி குடியரசுத் தலைவரிடம் இண்டியா கூட்டணி மனு
Updated on: 
1 min read

புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்​கம் செய்​யக் கோரி இண்டியா கூட்டணி சார்​பில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு​விடம் நேற்று கோரிக்கை மனு அளிக்​கப்​பட்​டது.

இண்​டியா கூட்​டணி தலை​வர்​களின் ஆலோ​சனைக் கூட்​டம் பழைய நாடாளு​மன்ற கட்​டிடத்​தில் நேற்று மாலை நடை​பெற்​றது. இதில் காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே, மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி, வயநாடு எம்பி பிரி​யங்கா காந்​தி, காஷ்மீர் முதல்​வர் ஒமர் அப்​துல்​லா, கர்​நாடக முதல்​வர் சிவகு​மார், திரிண​மூல் காங்​கிரஸ் தலை​வர் மம்தா பானர்​ஜி, தேசி​ய​வாத காங்​கிரஸ் (சரத் பவார்) எம்​பி. சுப்​ரியா சுலே, ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலை​வர் மனோஜ் ஜா, விசிக தலைவர் திருமாவளவன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமாரை பதவி நீக்​கம் செய்ய வலி​யுறுத்தி குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு​விடம் கோரிக்கை மனு அளிக்க கூட்​டத்​தில் முடிவு எடுக்​கப்​பட்​டது. இதைத் தொடர்ந்து நாடாளு​மன்ற வளாகத்​தில் இருந்து குடியரசுத் தலை​வர் மாளிகை நோக்கி இண்​டியா கூட்​டணி தலை​வர்​கள் பேரணி​யாக சென்​றனர். நுழைவு வாயி​லில் அவர்​களுக்கு அனு​மதி மறுக்​கப்​பட்​டது.

ராகுல் காந்​தி, மல்​லி​கார்​ஜுன கார்கே உட்பட 10 எம்​பிக்​களுக்கு மட்​டும் அனு​மதி வழங்கப்​பட்​டது. அவர்​கள் குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​முவை சந்​தித்து கோரிக்கை மனுவை அளித்​தனர். இதன்​பிறகு ராகுல் காந்தி கூறும்​போது, “இந்​திய ஜனநாயகத்தை ஞானேஷ்கு​மார் அழித்து வரு​கிறார். வாக்கு திருட்​டுக்கு அவர் உடந்​தை​யாக இருக்​கிறார் என்று குடியரசுத் தலை​வரிடம் எடுத்​துரைத்​தோம். இதுதொடர்​பான ஆதா​ரங்​களை அவர் கோரி​னார். எங்​களது மனு குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்​ப​தாக உறுதி அளித்​தார்” என்று தெரி​வித்​தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in