‘அக்வான்’ புயலை சந்திக்க தயாராகும் ஆந்திரா

‘அக்வான்’ புயலை சந்திக்க  தயாராகும் ஆந்திரா
Updated on: 
1 min read

அமராவதி: “அக்வான்” புயலால் ஆந்திராவுக்கு அதிக இழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால், அதிகாரிகள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

வங்கக் கடலில் உருவாகி உள்ள அக்வான் புயல், 48 மணி நேரத்தில் கடலோர ஆந்திராவில் மசூலிப்பட்டினம்-துனி இடையே கரையை கடக்கும் என விசாகப்பட்டினம் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அமராவதியில் இருந்தபடி காணொளி மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, “அர்னாப் புயலை விட அக்வான் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எச்சரித்துள்ளனர். அதிகாரிகள் அனைவரும் மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும்.தாழ்வான பகுதி மக்களை முகாம்களில் தங்க வையுங்கள். மீனவர்களை மீன் பிடிக்க செல்லாதவாறு அறிவிப்பு செய்யுங்கள்.

மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரியுங்கள். மின் வாரிய ஊழியர்கள், அதிகாரிகள், புயல் கரையை கடந்ததும், உடனுக்கு உடன் சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி, அறுந்த மின் கம்பிகளை இணைத்து மின்சாரத்தை துரிதமாக வழங்குங்கள்” என எச்சரித்துள்ளார்.

‘அக்வான்’ புயலை சந்திக்க  தயாராகும் ஆந்திரா
வங்கக்கடலில் ‘அக்வான்’ புயல் உருவானது: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் நாளை மிக கனமழை

X