குற்றம்சாட்டப்பட்ட ஒரு நபரை காவல் துறை கட்டுப்பாட்டில் எடுத்ததில் இருந்து 24 மணி நேரத்தில் ஆஜர்​படுத்​த வேண்டும்: உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

குற்றம்சாட்டப்பட்ட ஒரு நபரை காவல் துறை கட்டுப்பாட்டில் எடுத்ததில் இருந்து 24 மணி நேரத்தில் ஆஜர்​படுத்​த வேண்டும்: உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
Updated on: 
1 min read

புதுடெல்லி: காவல் துறை​யால் கைது செய்​யப்​பட்ட நபரை நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​து​வதற்​கான காலக்​கெடு எப்​போது தொடங்​கும்? என்​பது தொடர்​பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்​ளது.

திரிபுரா மாநிலத்​தில் போதைப் பொருள் தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் கைது செய்​யப்​பட்ட 4 நபர்​களுக்கு அம்​மாநில உயர் நீதி​மன்​றம் ஜாமீன் வழங்க மறுத்​து​விட்​டது. இதை எதிர்த்து அவர்​கள் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​தனர். அதில், 4 பேரும் கைது செய்​யப்​படு​வதற்கு முன்பு 18 மணி நேரம் சட்​ட​விரோத​மாக போலீஸ் காவலில் தடுத்து வைக்​கப்​பட்​டிருந்​தாக குற்​றம் சாட்டப்பட்​டது. இந்த மனு நீதிப​தி​கள் உஜ்ஜல் புயான் மற்​றும் அதுல் எஸ்.சந்​துர்​கர் அடங்​கிய அமர்வு முன்பு விசா​ரணைக்கு வந்தது.

இருதரப்பு வாதங்​களைக் கேட்ட நீதிப​தி​கள் வழங்​கிய தீர்ப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: ஒரு நபர் எப்​போது காவல் துறை​யின் கட்டுப்பாட்​டுக்​குள் கொண்டு வரப்​படு​கிறாரோ, அந்த கணத்​தில் இருந்து 24 மணி நேரத்​துக்​குள் அவரை நீதிபதி முன் ஆஜர்​படுத்​து​வதற்​கான காலக்​கெடு தொடங்​கு​கிறது. அதாவது, ஒரு​வரை காலை 10 மணிக்கு தடுத்து வைத்​து​விட்டு மாலை 6 மணிக்கு கைது செய்​த​தாக காவல் துறை பதிவு செய்​தா​லும் காலை 10 மணியி​லிருந்து 24 மணி நேரம் கணக்​கிடப்பட வேண்​டும்.

மேலும், கைது செய்​யப்​பட்ட நபரை நீதி​மன்​றத்​தில் ஆஜர்படுத்தப்படும்​போது அவர் உண்​மை​யில் எந்த நேரத்​தில் தடுத்து வைக்கப்பட்​டார் என்​பதை நீதிபதி கட்​டா​யம் பதிவு செய்ய வேண்​டும். தடுத்து வைக்​கப்​பட்ட நபரை 24 மணி நேரத்துக்​குள் நீதிபதி முன்பு ஆஜர் படுத்​து​வது கட்​டா​யம். முறைப்படி​யான கைது பதிவேட்டை சுட்​டிக்​காட்டி தாமத​மாக ஆஜர்​படுத்​து​வதை ஏற்க முடி​யாது. அது​போல, 24 மணி நேரம் அவகாசம் உள்​ளது என்​ப​தற்​காக ஒரு​வரை தேவை​யின்​றி நீண்​ட நேரம்​ தடுத்​து வைத்​திருக்​கக்​ கூ​டாது. இவ்​​வாறு அதில்​ கூறப்பட்டுள்​ளது.

குற்றம்சாட்டப்பட்ட ஒரு நபரை காவல் துறை கட்டுப்பாட்டில் எடுத்ததில் இருந்து 24 மணி நேரத்தில் ஆஜர்​படுத்​த வேண்டும்: உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
வேலை வாங்கித் தருவதாக பணமோசடி வழக்கு: செந்தில் பாலாஜி உள்ளிட்ட முதல் 50 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்

X