முதல்கட்ட தேர்தல் நடந்த 152 இடத்தில் 110 தொகுதிகளை பாஜக கைப்பற்றும்: அமித் ஷா நம்பிக்கை

முதல்கட்ட தேர்தல் நடந்த 152 இடத்தில் 110 தொகுதிகளை பாஜக கைப்பற்றும்: அமித் ஷா நம்பிக்கை
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்​கு​வங்​கத்​தில் முதல் கட்ட தேர்​தல் நடை​பெற்ற 152 இடங்​களில், 110 இடங்​களில் பாஜக வெற்றி பெறும். மம்தா பதவி​யில் இருந்து இறங்குவார் என அமைச்​சர் அமித் ஷா கூறியுள்ளார்.

மேற்கு வங்​கத்​தில் முதல் கட்ட தேர்​தல் முடிந்த பின், மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: பிரதமர் மோடி மற்​றும் பாஜக மூத்த தலை​வர்​கள் பங்​கேற்ற தேர்​தல் பிரச்​சார கூட்​டங்​களில் மக்​கள் கூட்​டம் அதி​க​மாக இருந்​தது. முதல் கட்ட தேர்​தலில் 110 இடங்​களில் பாஜக வெற்றி பெறும். திரிண​மூல் ஆட்​சியை மக்​கள் நிராகரித்​ததை தேர்​தல் முடிவு​கள் காட்​டும். இங்கு பாஜக ஆட்​சிக்கு வந்​தால், வெளி​மாநிலத்​தவரை பாஜக முதல்​வ​ராக்​கும் என மம்தா பானர்ஜி வதந்தி பரப்​பு​கிறார்.

அடுத்த முதல்​வர் மேற்கு வங்​கத்​தில் பிறந்​து, வங்க மொழி​யில் படித்​தவ​ராக இருப்​பார். ஆனால், மம்​தா​வின் நெருங்​கிய உறவின​ராக மட்​டும் இருக்க மாட்​டார். மம்தா முதல்​வர் பதவி​யில் இருந்து இறங்க வேண்​டும் என மேற்கு வங்க மக்​கள் முடிவு செய்து விட்​டனர். இங்கு பாஜக ஆட்சி அமைக்​கும். மக்​கள் இடையே அச்​சம் விலகி நம்​பிக்கை அதி​கரித்து வரு​கிறது.

இங்கு முதல் கட்ட தேர்​தலை அமை​தி​யாக நடத்​திய மத்​திய போலீஸ் படை​யினருக்​கும், தேர்​தல் ஆணை​யத்​துக்​கும் நன்​றி. இவ்​வாறு அமித்​ ஷா கூறி​னார்​.

முதல்கட்ட தேர்தல் நடந்த 152 இடத்தில் 110 தொகுதிகளை பாஜக கைப்பற்றும்: அமித் ஷா நம்பிக்கை
மே.வங்க தேர்தல் வெற்றிக்கு பிறகு டெல்லியைக் கைப்பற்றுவேன்: மம்தா பானர்ஜி ஆவேசம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in