மேற்கு வங்க தேர்தலில் பாஜக வென்றதும் ஊடுருவல்காரர்களை வெளியேற்றுவோம்: அமித் ஷா

மேற்கு வங்க தேர்தலில் பாஜக வென்றதும் ஊடுருவல்காரர்களை வெளியேற்றுவோம்: அமித் ஷா
Updated on
1 min read

அராரியா: பிஹார் மாநிலம் அராரியா மாவட்​டத்​தில் சசாஸ்​திர சீமா பால் துணை ராணுவப் படை நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசி​ய​தாவது: மேற்​கு ​வங்​கத்​தில் சட்டப்பேரவை தேர்​தல் நடை​பெறவுள்​ளது. அங்கு பாஜக வெற்றி பெறும் என்ற நம்​பிக்கை உள்​ளது.

புதிய ஆட்சி அமைந்​ததும், அங்​குள்ள ஊடுரு​வல்​காரர்​கள் வெளியேற்​றப்​படு​வர். பிஹாரின் சீமாஞ்​சல் பகு​தி​யிலும் ஊடுருவல்​காரர்​களை வெளி​யேற்​றும் பணி தொடங்​கும். இதைச் சொல்​லி​ தான் கடந்​தாண்டு நடை​பெற்ற பிஹார் தேர்​தலில் வெற்றி பெற்​றோம். இதை எதிர்க்​கட்​சிகள் விமர்​சித்​தா​லும், நாங்கள் ​தான் வெற்றி பெற்​றோம்.

ஊடுரு​வலால் ரேஷன் பொருட்​கள் விநி​யோகத்​தில் சிக்​கல் நிலவுகிறது. சாதாரண மக்​களுக்கு கிடைக்​க வேண்​டிய பலன்​கள் எல்​லாம் ஊடுரு​வல்​காரர்​களுக்கு கிடைக்​கிறது. மக்​கள் தொகை எண்​ணிக்​கை​யில் மாற்​றம் நில​வு​கிறது. இதை சரிசெய்​வ​தில் பிரதமர் மோடி அரசு உறு​தி​யாக உள்​ளது. இவ்​வாறு அமித்​ ஷா கூறி​னார்​.

மேற்கு வங்க தேர்தலில் பாஜக வென்றதும் ஊடுருவல்காரர்களை வெளியேற்றுவோம்: அமித் ஷா
கடற்கரை - தாம்பரம் இடையே சிறப்பு இலவச பேருந்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in