அஜித் பவார் உத்தரவில் கிடைத்த ஆம்புலன்ஸ்: ஓட்டுநர் உருக்கம்

அஜித் பவார் உத்தரவில் கிடைத்த ஆம்புலன்ஸ்: ஓட்டுநர் உருக்கம்
Updated on
1 min read

பாராமதி: துணை முதல்வர் அஜித் பவாரின் மரணம் குறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் உருக்கமான நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

மகா​ராஷ்டி​ரா​வின் பாராமதி நகராட்​சி​யில் மிக பழைய ஆம்​புலன்ஸ் செயல்​பாட்​டில் உள்​ள​தாக 6 மாதங்​களுக்கு முன்பு செய்தி வெளி​யானது. இதை பார்த்த துணை முதல்​வர் அஜித் பவார், பாராமதி தொகு​திக்கு புது ஆம்​புலன்ஸ் வாங்​கித் தர அதி​காரி​களுக்கு உத்​தர​விட்​டார்.

இது குறித்து அந்த ஆம்​புலன்ஸ் ஓட்​டுநர் கூறுகை​யில், ”ஆம்புலன்ஸ் வாக​னத்தை என்​னிடம் அஜித் பவார் ஒப்​படைக்​கும்​போது, நேர்​மை​யாக வேலை பார்க்க வேண்​டும்” என எனக்கு அவர் அறி​வுரை வழங்​கி​னார். ஆனால், இப்​போது அதே வாக​னத்​தில் அவரது உடல் மருத்​து​வ​மனையி​லிருந்து கடைசி​யாக எடுத்​துச் செல்​லப்​படு​கிறது” என கண்​ணீர் மல்​க கூறி​னார்​.

அஜித் பவார் உத்தரவில் கிடைத்த ஆம்புலன்ஸ்: ஓட்டுநர் உருக்கம்
கொலம்பியாவில் விமான விபத்து: எம்.பி. உட்பட 15 பேர் உயிரிழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in