ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு அனுமதி வழங்குவது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: பாஜக எம்பி நிஷிகாந்த் துபே எச்சரிக்கை

ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு அனுமதி வழங்குவது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: பாஜக எம்பி நிஷிகாந்த் துபே எச்சரிக்கை
Updated on: 
1 min read

புதுடெல்​லி: இந்தியா​வில் ஸ்டார்லிங்க் நிறு​வனத்​துக்கு அனு​மதி வழங்​கு​வது நாட்​டின் பாது​காப்​புக்கு அச்​சுறுத்​தலாக அமை​யும் என்று நாடாளு​மன்​றக் குழு தலை​வரும், பாஜக எம்​.பி.​யு​மான நிஷிகாந்த் துபே எச்​சரித்​துள்​ளார்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறு​வனத்​தின் தலை​வ​ரான எலான் மஸ்க் வெளியிட்ட பதி​வில், “ஸ்​டார்​லிங்​கால் ஜியோ நிறு​வனத்​தின் குறைந்த விலைகளு​டன் போட்​டி​யிட முடி​யாது என்​கிறார்​கள்; மறுபுறம் ஸ்டார்​லிங்க் கடுமை​யான போட்​டியைக் கொடுக்​கும் என்​றும் அஞ்​சுகிறார்​கள். வெளிப்​படை​யான போட்டி நில​வுவது இந்​தி​யக் குடிமக்​களுக்கு நன்மை பயக்​கும்.

விலையை சந்தை நில​வரமே தீர்​மானிக்​குமே தவிர, நாங்​கள் அதற்​கேற்ப மாற்​றிக்​கொள்​வோம். அன்​புள்ள பிரதமர் அம்​பானி அவர்​களே, நீங்​கள்​தான் இந்​தி​யா​வின் உண்​மை​யான பாஸ் என்​பதை உணராததற்கு என் மன்​னிப்​பைக் கோரு​கிறேன்” என கிண்​டலாகப் பதிவிட்டிருந்தார்.

மஸ்க்​கின் இந்​தப் பதிவு​களுக்​குக் கண்​டனம் தெரி​வித்​து பாஜக எம்​.பி. நிஷி​காந்த் துபே கூறிய​தாவது: பாது​காப்பு விதி​களில் சமரசமில்​லை. இந்​தியா ஒரு ஆரோக்​கிய​மான, இறை​யாண்மை கொண்ட ஜனநாயகம். சமூகவலைதள அழுத்​தங்​களுக்​குப் பணிந்து அது தனது பாது​காப்​புக் கொள்​கையை மாற்றிக்கொள்ளாது.

நாடாளு​மன்​றக் குழு​வின் தலை​வ​ராக நாங்​கள் நடத்​திய ஆய்வுகளில், ஸ்டார்​லிங்க் போன்ற வெளி​நாட்டு செயற்கைக்கோள் நிறு​வனங்​களால் நாட்​டின் பாது​காப்பு முகமைகள், உள்​துறை மற்​றும் பாது​காப்பு அமைச்​சகங்​கள் எதிர்கொள்​ளும் ஆபத்​துகள் கண்​டறியப்​பட்​டுள்​ளன. அமெரிக்கா போன்ற நாடு​களில் ஏழைகளுக்​குக் குறைந்த விலை​யில் இணையவசதியை எலான் மஸ்க் முதலில் வழங்க வேண்​டும். இந்தி​யாவை சமூக வலை​தளங்​கள் மூலம் அவர்​ வளைக்​க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு அனுமதி வழங்குவது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: பாஜக எம்பி நிஷிகாந்த் துபே எச்சரிக்கை
‘கல்வி நிதி ரூ.5,110 கோடியை விடுவிக்க வேண்டும்’ - பிரதமருக்கு முதல்வர் விஜய் கோரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in