டெல்லியில் இன்று இண்டியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம்: திரிணமூல் உட்பட 23 கட்சிகள் பங்கேற்பு

திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு
இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதற்காக டெல்லி சென்றுள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலை நேற்று சந்தித்து பேசினார்.

இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதற்காக டெல்லி சென்றுள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலை நேற்று சந்தித்து பேசினார்.

Updated on
1 min read

புதுடெல்லி: இண்​டியா கூட்​ட​ணி​யின் ஆலோ​சனைக் கூட்​டம் டெல்​லி​யில் இன்று நடை​பெறுகிறது. இதில் திரிண​மூல் காங்​கிரஸ் உட்பட 23 கட்​சிகள் பங்​கேற்​கின்​றன. இக்​கூட்​டத்​தில் பங்​கேற்​கப் போவ​தில்லை என்று திமுக ஏற்​கெனவே அறி​வித்​துள்ள நிலை​யில், ஆம் ஆத்​மி​யும் பங்​கேற்​க​வில்​லை.

நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடர் அடுத்த மாதம் தொடங்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதில் தொகுதி மறு​வரையறை மற்​றும் பெண்​கள் இட ஒதுக்​கீடு மசோதா ஆகியவை மீண்​டும் தாக்​கல் செய்​யப்​படலாம் என கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில் இண்​டியா கூட்​டணி கூட்​டம் டெல்​லி​யில் இன்று நடை​பெறுகிறது.

தமிழகம் உட்பட 5 மாநிலங்​களில் சமீபத்​தில் நடந்து முடிந்த பேரவைத் தேர்​தல்​களில் சில முக்​கிய கூட்​ட​ணிக் கட்​சிகள் பின்​னடைவை சந்​தித்​தன. இந்த பின்​னடைவு​கள் மற்​றும் கூட்​ட​ணிக்​குள் அதி​கரித்து வரும் மனக்​கசப்​பு​களுக்கு மத்​தி​யில், எதிர்க்​கட்​சிகளின் இண்​டியா கூட்​ட​ணி​யின் முதல் ஆலோ​சனைக் கூட்​டம் டெல்​லி​யில் இன்று நடை​பெறுகிறது.

இது குறித்து காங்​கிரஸ் பொதுச்​செய​லா​ளர் ஜெய்​ராம் ரமேஷ் கூறுகை​யில், ‘‘டெல்​லி​யில் உள்ள கான்​ஸ்​டிடியூஷன் கிளப்​பில் இன்று மதி​யம் 12 மணிக்கு நடை​பெறும் இண்​டியா கூட்​டணி கூட்​டத்​தில் பங்​கேற்​பதை 23 கட்​சிகள் உறு​திப்​படுத்​தி​யுள்​ளன’’ என்​றார். இந்த கூட்​டத்​துக்கு திரிண​மூல் காங்​கிரஸ் ஆதரவு தெரி​வித்​துள்​ளது. இதில் பங்​கேற்க அக்​கட்​சி​யின் தலை​வர் மம்தா பானர்ஜி நேற்று டெல்லி சென்​றார். இது குறித்து திரிண​மூல் காங்​கிரஸ் மாநிலங்​களவை எம்பி தெரெக் ஓ பிரையன் கூறுகை​யில் "ஒரு பொது​வான நோக்​கத்​துட​னும் தெளி​வான எண்​ணத்​துட​னும் இந்த சந்​திப்பு நடக்​கிறது. இண்​டியா கூட்​டணி ஒன்​று​பட்​டுள்​ளது. பல கட்​சிகளும் தோழமை உணர்​வோடு இந்த சந்​திப்பை எதிர்​நோக்​கி​யுள்​ளன" என்​றார்.

இந்த கூட்​டத்​தில் உத்​தவ் தாக்​கரே, அகிலேஷ் யாதவ், பரூக் அப்​துல்​லா, தேஜஸ்வி யாதவ், ராகுல் காந்தி மற்​றும் காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே உள்​ளிட்ட தலை​வர்​கள் பங்​கேற்​பார்​கள் என்று தெரி​கிறது.

திமுக புறக்​கணிப்பு: தமிழகத்​தில், தவெகவுக்கு காங்​கிரஸ் ஆதரவு தெரிவித்து ஆட்​சி​யிலும் பங்​கேற்​ற​தால், அந்த கட்சி தங்​களுக்கு துரோகம் செய்​து​விட்​ட​தாக திமுக குற்​றம் சாட்​டி​யுள்​ளது. இதனால், டெல்​லி​யில் காங்​கிரஸ் பங்​கேற்​கும் இண்​டியா கூட்​டணி கூட்​டத்​தில் பங்​கேற்க மாட்​டோம் என்று திமுக ஏற்​கெனவே அறி​வித்​துள்​ளது. அதே​போல், ஆம் ஆத்மி கட்​சி​யும் இதில் பங்​கேற்க வாய்ப்​பில்லை என்று கூறப்​படு​கிறது.

கேரள பேரவைத் தேர்​தல் பிரச்​சா​ரத்​தின் போது கூறப்​பட்ட கருத்​துக்​கள் தொடர்​பாக காங்​கிரஸுக்​கும், மார்க்​சிஸ்ட் கட்​சிக்​கும் இடையே ஏற்​பட்ட சர்ச்​சை​யும் இக்​கூட்​டத்​தில் எதிரொலிக்க வாய்ப்​புள்​ளது. மார்க்​சிஸ்ட் சார்​பில் மாநிலங்​களவை எம்பி ஜான் பிரிட்​டாஸ் இக்கூட்டத்தில் பங்​கேற்​கிறார். அவர் இந்த விவ​காரத்தை எழுப்​பு​வார் என்று கூறப்​படு​கிறது.

<div class="paragraphs"><p>இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதற்காக டெல்லி சென்றுள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலை நேற்று சந்தித்து பேசினார்.</p></div>
செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி: இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது விசாரணை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in