பஞ்சாப் முதல்வர் குரு துரோகி: ‘அகால் தக்த்’ விமர்சனம்

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

Updated on
1 min read

சண்டிகர்: பஞ்சாபில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில், அங்கு சமூக வலை தளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு அறைக்குள் எடுக்கப்பட்டது போல் இருக்கும் அந்த வீடியோவில், முதல்வரைப் போன்ற தோற்றம் கொண்ட ஒருவர் மது அருந்துவது போலவும், சீக்கிய குருக்களின் புகைப்படங்கள் மீது மதுவை தெளிப்பது போலவும் காட்சிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சீக்கிய குருக்களை பகவந்த் மான் அவமதித்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேநேரம் அந்த வீடியோவில் இருப்பது தான் அல்ல என்று பகவந்த் மான் மறுத்துள்ளார்.

அரசியல் எதிரிகள் தன்னை அவமதிப்பதற்காக அவதூறு பரப்புவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதனிடையே, சீக்கியர்களின் மிக உயர்ந்த மத அமைப்பான அகால் தக்த், இந்த சர்ச்சைக்குரிய வீடியோ விவகாரத்தில் பஞ்சாப் முதல்வரை குரு-துரோகி மற்றும் கல்சா பந்திற்கு எதிரானவர் என்று அறிவித்த அடுத்த நாளே இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது.

மேலும், வீடியோவின் நம்பகத் தன்மை குறித்து மான் தங்களை தவறாக வழி நடத்தியதாகவும் சீக்கிய மத குருக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

<div class="paragraphs"><p><em>பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்</em></p></div>
நிம்மதியான மரணம்... உங்களுக்கு Living Will தெரியுமா? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in