மும்பை மாநகராட்சி தேர்தலில் அஜித் பவார் தனித்து போட்டி

மும்பை மாநகராட்சி தேர்தலில் அஜித் பவார் தனித்து போட்டி
Updated on
1 min read

மும்பை: மும்பை மாநக​ராட்சி தேர்​தலில் தனித்​துப் போட்​டி​யிட தேசி​ய​வாத காங்​கிரஸின் அஜித் பவார் அணி முடிவு செய்​திருக்​கிறது.

மகா​ராஷ்டி​ரா​வில் நகராட்​சிகள், பஞ்​சா​யத்​துகளுக்கு கடந்த 2, 20 ஆகிய தேதி​களில் தேர்​தல் நடை​பெற்​றது. இதன் முடிவு​கள் கடந்த 21-ம் தேதி வெளி​யிடப்​பட்​டன. இதில் பாஜக தலை​மையி​லான ஆளும் மகா​யுதி கூட்​டணி அமோக வெற்றி பெற்​றது.

இதைத் தொடர்ந்து 29 மாநக​ராட்​சிகளுக்கு ஜனவரி 15-ல் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்த மாநக​ராட்​சிகள் 4 பிரிவு​களாக பிரிக்கப்​பட்டுள்​ளன. மும்​பை, நாக்​பூர், புனே, பிவண்​டி-நிஜாம்​பூர் மாநக​ராட்​சிகள் ஏ பிரி​வில் உள்​ளன.

மும்பை மாநக​ராட்​சி​யில் 227 வார்​டு​கள் உள்​ளன. இந்த மாநக​ராட்சி தேர்​தலில் ஆளும் மகா​யுதி கூட்​ட​ணி​யின் வார்டு பங்​கீட்​டில் குழப்​பம் நீடிக்​கிறது. ஆளும் கூட்​ட​ணி​யில் பாஜக, சிவசேனா (ஏக்​நாத் ஷிண்டே அணி), தேசி​ய​வாத காங்​கிரஸ் (அஜித் பவார் அணி) கட்​சிகள் உள்​ளன. இதில் அஜித் பவார் அணி தனித்​துப் போட்​டி​யிட முடிவு செய்​திருக்​கிறது.

இதுதொடர்​பாக தேசி​ய​வாத காங்​கிரஸின் (அஜித் பவார்) மூத்த தலை​வர் சுனில் தாட்​கரே கூறும்​போது, “மும்பை மாநக​ராட்சி தேர்​தல் தொடர்​பாக பல்​வேறு ஆலோ​சனை கூட்​டங்​களை நடத்தி உள்​ளோம். இதன்​படி தனித்​துப் போட்​டி​யிட முடிவு செய்​திருக்​கிறோம். இதுதொடர்​பான அறி​விப்பு விரை​வில் வெளி​யிடப்​படும். தேர்​தலுக்​குப் பிறகு மகா​யுதி கூட்​ட​ணி​யுடன் ஒன்​றிணைந்​து செயல்​படு​வோம்​’’ என்​று தெரி​வித்​தார்​.

மும்பை மாநகராட்சி தேர்தலில் அஜித் பவார் தனித்து போட்டி
கேரளாவில் மட்டத்தூர் பஞ்சாயத்தை கைப்பற்ற பாஜகவுடன் கைகோத்த 8 காங்கிரஸ் கவுன்சிலர்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in