அஜித் பவார் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தும் அமித் ஷா

அஜித் பவார் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தும் அமித் ஷா

முழு அரசு மரியாதையுடன் அஜித் பவார் உடல் தகனம்

இறுதிச் சடங்கில் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்பு
Published on

மும்பை: விமான விபத்தில் உயிரிழந்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் இறுதிச் சடங்குகள் புனே மாவட்டத்தில் உள்ள பாராமதியில் முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாராமதியில் உள்ள வித்யா பிரதிஷ்டான் மைதானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, ராம்தாஸ் அதாவலே, முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார், பாஜக தலைவர் நிதின் நபின், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், ஆந்திரப் பிரதேச அமைச்சர் நர லோகேஷ், முன்னாள் மத்திய அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே ஆகியோர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

மேலும், அஜித் பவாரின் மனைவியும் மாநிலங்களவை உறுப்பினருமான சுனேத்ரா பவார், மகன்கள் பார்த் பவார், ஜெய் பவார், அஜித் பவாரின் உறவினரான சுப்ரியா சுலே, தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சரமான பிரபுல் படேல் உள்ளிட்டோர் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டனர். இறுதிச் சடங்கில் பங்கேற்க வந்த தலைவர்கள் இவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

அஜித் பவாரின் உடல் மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டிருந்தது. முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அஜித் பவாரின் மகன்கள் பார்த் மற்றும் ஜெய் ஆகியோர் தங்கள் தந்தையின் சிதைக்கு தீ மூட்டினர். இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கில் தொண்டர்களும் பொதுமக்களும் பங்கேற்று தங்கள் சோகத்தை வெளிப்படுத்தினர்.

விமான விபத்தில் இறந்த அஜித் பவார்: அஜித் பவார் நேற்று காலை 8.10 மணிக்கு மும்பை விமான நிலையத்தில் இருந்து பாராமதிக்கு ‘லியர்ஜெட் 45’ என்ற சிறிய ரக விமானத்தில் பயணம் செய்தார். இது டெல்லியைச் சேர்ந்த விஎஸ்ஆர் வென்சர்ஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானது. பம்பார்டியர் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தயாரிப்பான லியர்ஜெட் 45 விமானத்தில் அஜித் பவாரின் பாதுகாப்பு அதிகாரி விதிப் ஜாதவ், பைலட்கள் சுமித் கபுர், சம்பவி பதக், விமான உதவியாளர் ஆகிய 4 பேர் சென்றனர்.

மும்பையில் இருந்து பாராமதி 256 கி.மீ. தொலைவில் உள்ளது. விமானத்தில் 45 நிமிடத்தில் செல்லலாம். நேற்று காலை 8.18 மணியளவில் பாராமதி விமான நிலையத்தின் ஓடுபாதை பனிமூட்டத்தால் தெரியவில்லை. விமானக் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு அவர்கள் அளித்த உத்தரவின்படி விமானத்தை பைலட் தரையிறக்க 2 முறை முயற்சி செய்தார். மூன்றாவது முறையாக 8.43 மணிக்கு விமானம் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பிறகு விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதேநேரத்தில் 8.44 மணியளவில் விமான நிலைய ஓடு பாதையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் விமானம் தரையில் மோதி வெடித்தது.

இதையடுத்து மீட்புப் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு, விமானத்தில் இருந்த 5 பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அவர்கள் தீக்காயத்தால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

<div class="paragraphs"><p>அஜித் பவார் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தும் அமித் ஷா</p></div>
‘‘நாங்கள் ஒரே நோக்கத்துடன் பயணிக்கிறோம்’’ - கார்கே, ராகுல் உடனான சந்திப்புக்குப் பிறகு சசி தரூர் பேட்டி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in