சீனா சென்றார் அஜித் தோவல்

சீனா சென்றார் அஜித் தோவல்
Updated on
1 min read

பெய்ஜிங்: இந்தியாவும் சீனாவும் 3,488 கி.மீ. தொலைவு எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. லடாக், உத்தராகண்ட், சிக்கிம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் இரு நாடுகள் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. எனினும் அமைதி பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளும் பதற்றத்தை தணித்து வருகின்றன.

எல்லைப் பிரச்சினை குறித்து பேச்சு வார்த்தை நடத்த இந்திய தரப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும், சீனா சார்பில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் வாங் - யீயும் சிறப்பு பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதன்படி இந்தியா, சீனா இடையிலான 25-வது சுற்று பேச்சு வார்த்தை பெய்ஜிங்கில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க அஜித் தோவல் நேற்று பெய்ஜிங் சென்றார்.

அங்கு சீன வெளியுறவு அமைச்சர் வாங்- யீ-ஐ அவர் இன்று சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

சீனா சென்றார் அஜித் தோவல்
எகிறும் சர்க்கரை விலை: எத்தனால் பெட்ரோல் தான் காரணமா? - சர்ச்சையும் பின்னணியும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in