“உள்நாட்டு தயாரிப்புக்கே முன்னுரிமை” - விமானப் படையின் புதிய தளபதி அசுதோஷ் தீட்சித்

விமானப் படை தளபதி அசுதோஷ் தீட்சித்

விமானப் படை தளபதி அசுதோஷ் தீட்சித்

Updated on: 
1 min read

புதுடெல்லி: இந்திய விமானப் படையில் உள்நாட்டு தயாரிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று புதிய விமானப் படை தளபதி அசுதோஷ் தீட்சித் தெரிவித்துள்ளார்.

விமானப் படை தளபதி பொறுப்பை ஏற்ற பின்னர் அவர் பொதுவெளியில் பகிர்ந்த முதல் கருத்தில் கூறியதாவது: தேஜஸ் எம்.கே-1ஏ மற்றும் எம்.கே-2, எதிரிகளின் ரேடாரில் சிக்காத ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமான ஏஎம்சிஏ மற்றும் இந்தியத் தயாரிப்பு ஆயுதங்கள், சென்சார்களுக்கு முன்னுரிமை அளிப்போம்.

இந்தியத் தயாரிப்புகளைக் கொண்டே போரிடுவோம்; நமது படையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் எண்ணிக்கையில் அவற்றை வைத்திருப்போம். போரிட்டு வெற்றி பெறுவது எங்கள் பொறுப்பு; ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, நம்பகமான வான் வலிமையின் மூலம் மோதல்கள் ஏற்படாமல் தடுப்பதே மிகவும் முக்கியமானது என்று நம்புகிறோம்.

விமானப் படையின் படைப்பிரிவு, ரேடார் நிலையம், வான் பாதுகாப்பு அலகு, ஒவ்வொரு விமானப்படை வீரரும் எந்த நேரத்திலும் செயல்படத் தயாராக இருக்க வேண்டும். நமது போர் வலிமையை அதன் அனுமதிக்கப்பட்ட நிலைக்கு கொண்டு வருவதே எனது முதல் பணியாக இருக்கும்.

தொழில்நுட்பத்தில் புத்தாக்கம், செயற்கை நுண்ணறிவு சார்ந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு, ட்ரோன் எதிர்ப்பு தற்காப்பு, படைப் பாதுகாப்பு மற்றும் இந்திய விமானப்படைக்கான செயல்பாட்டுத் தளமாக விண்வெளிக்கு அருகிலுள்ள பகுதியை பயன்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

யார் இந்த அசுதோஷ் தீட்சித்?

விமானப் படையின் 29-வது தளபதியாக அசுதோஷ் தீட்சித் நேற்று பதவியேற்றுக் கொண்டார். வரும் 2028 டிசம்பர் 31 வரை அவர் பதவியில் நீடிப்பார்.

கடந்த 1986-ம் ஆண்டில் இந்திய விமானப் படையில் தீட்சித் இணைந்தார். மிகக் குறுகிய காலத்திலேயே சிறந்த போர் விமானியாக உருவெடுத்தார்.

இதன் காரணமாக விமானப்படையில் சேர்க்கப்படும் புதிய போர் விமானங்களை சோதனை செய்யும் பொறுப்பு அவரிடம் வழங்கப்பட்டது.

சுமார் 20 வகையான போர் விமானங்களை இயக்கும் திறன் பெற்ற அசுதோஷ் தீட்சித், கார்கில் போரின்போது துணிச்சலாக செயல்பட்டு எதிரிகளின் முகாம்கள் மீது குண்டுகளை வீசினார். ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை வெற்றிக்கு அசுதோஷ் தீட்சித் மிக முக்கியப் பங்காற்றினார்.

கிழக்கு பிராந்திய விமானப்படை தளபதி, மத்திய பிராந்திய தளபதி, உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகளை அவர் வகித்துள்ளார்.

<div class="paragraphs"><p>விமானப் படை தளபதி அசுதோஷ் தீட்சித்</p></div>
ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஹார்மர் பந்துவீச்சில் வென்றது தென் ஆப்பிரிக்கா

X