“2 ஆண்டு பணி நீட்டிப்புக்குப் பிறகு அக்னி வீரர்கள் நிரந்தரமாக்கப்பட வாய்ப்பு” - ராஜ்நாத் சிங்

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

Updated on: 
1 min read

பாக்தோக்ரா: “இரண்டாண்டு பணி நீட்டிப்புக்கு பிறகு, அனைத்து அக்னிவீரர்களும், அவர்களின் விருப்பம் மற்றும் தேர்வு அளவுகோல்களுக்கு உட்பட்டு, நிரந்தர வீரர்களாக பணியில் சேரத் தகுதி பெறுவார்கள்” என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பாக்தோக்ராவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் விமானப்படை வீரர்களுடன் உரையாடிய ராஜ்நாத் சிங், “ அக்னி வீரர்கள் தங்களின் இரண்டாண்டு கால பணி நீட்டிப்பை முடித்த பிறகு, அனைவரும் நிரந்தர வீரர்களாகச் சேர வாய்ப்பு வழங்கப்படும். இதற்கு அவர்களின் விருப்பமும், அதற்கான தேர்வு அளவுகோல்களைப் பூர்த்தி செய்வதும் அவசியமாகும்" என்று கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய ராஜ்நாத் சிங், “சிலிகுரி காரிடார் இந்தியத் துணைக்கண்டத்தின் மிகக் குறுகிய பகுதியாக இருப்பதால், 'கோழிக் கழுத்து (Chicken’s Neck)' என்று அழைக்கப்படுகிறது; இது வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் முக்கியப் பாதையாகும். இந்தப் பகுதி நேபாளத்திற்கும் வங்கதேசத்திற்கும் இடையே அமைந்துள்ளது; இதன் அருகிலேயே பூடான் மற்றும் சீனா எல்லைகளும் உள்ளன.

பாக்தோக்ரா ஒரு முக்கியமான மற்றும் உணர்திறன் மிக்க பகுதியில் அமைந்துள்ளது. எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ள, இங்கு எப்போதும் போருக்குத் தயாரான நிலையில் இருப்பது அவசியம்.

உள்ளூர் மக்களுடன், குறிப்பாக பாக்தோக்ரா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிப்பவர்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அவர்களிடையே நம்பிக்கையையும் அன்பையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். நீங்கள் உள்ளூர் மக்களுடன் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு எதிரிகளின் சதித்திட்டங்கள் பலவீனமடையும்” என்று கூறினார்.

தற்போது, ​​அக்னி பாத் திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட மூன்று லட்சத்திற்கும் அதிகமான வீரர்கள் பாதுகாப்புப் படைகளில் பணியாற்றி வருகின்றனர். அக்னி வீரர்களுக்கு கூடுதல் இரண்டாண்டு கால பணி நீட்டிப்பை வழங்குவது மற்றும் அதன் பிறகு நிரந்தரப் பணியில் சேர்ப்பது குறித்த இந்த முடிவு, சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

<div class="paragraphs"><p>பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்</p></div>
பஞ்சாப், ஹரியானா, இமாச்சல் இடையே ஒப்பந்தம் - 60 ஆண்டுகால நீர்மின் திட்ட சர்ச்சைக்கு தீர்வு

X