ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் புனேவில் பறிமுதல்

ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் புனேவில் பறிமுதல்
Updated on
1 min read

மும்பை: ஆப்​பிரிக்க கெளுத்தி மீன்​கள் நீர் நிலைகளில் பல்லுயிர்ப் பெருக்​கத்​துக்​கும், சுற்​றுச்​சூழலுக்கு அச்சுறுத்தலாகவும் உள்​ளன. இதனால் இந்த வகை மீன்​களை வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்​நிலை​யில், மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்​டத்​தின் உஜானி அணை அரு​கே​யுள்ள நீர்த்​தேக்​கத்​தில் 2.4 டன் ஆப்​பிரிக்க கெளுத்தி மீன்​கள் சட்​ட​விரோத​மாக வளர்க்​கப்​படு​வ​தாக மீன்வளத் துறைக்கு தகவல் கிடைத்​தது. இதையடுத்து மீன்​வளத்​துறை​யின் உதவி ஆணை​யர் அர்ச்​சனா ஷிண்டே தலைமையிலான குழு சோதனை கடத்தி அந்த மீன்​களை கைப்பற்றி அழித்தனர்.

இந்த மீன்​கள் வளர்க்​கப்​பட்ட நீர்த்​தேக்​கத்​தில் சுற்​றுச்​சூழல் பாதிப்பு ஏற்​பட்​டுள்​ளதா என்ற பரிசோதனை​யும் நடத்​தப்​பட்​டது. அந்த மீன்​களை வளர்க்க வேண்​டாம் என விவ​சா​யிகளிடம் வேண்டு​கோள் விடுக்​கப்​பட்​டுள்​ளது.

ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் புனேவில் பறிமுதல்
23 கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய டெல்லி ரவுடி ஹர்சிம்ரன் தாய்லாந்தில் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in