திருப்பதி லட்டு தயாரிக்க கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரம்: உ.பி. தனியார் நிறுவன உரிமையாளர் கைது

திருப்பதி லட்டு பிரசாதம்

திருப்பதி லட்டு பிரசாதம்

Updated on
1 min read

புதுடெல்லி: திருப்​பதி லட்டு நெய் கலப்பட வழக்​கில் சுக்​ருதி ஃபுட்ஸ் நிறு​வனத்​தின் உரிமை​யாளர் கைலாஷ் சந்த் மங்​களாவை, அமலாக்​கத்​துறை கைது செய்​துள்​ளது.

இதுகுறித்​து, அமலாக்​கத் துறை வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

சுத்​தி​கரிக்​கப்​பட்ட பாமா​யில், பாம் கர்​னல் எண்​ணெய், பாமோலின் ஆகிய​வற்​றுடன் எம்​ஜி-90, மோனோ கிளிசரைடு​கள் மற்​றும் அசிட்​டிக் அமிலம் உள்​ளிட்ட ரசாயனங்​களை சேர்த்து சில நிறு​வனங்​கள் நெய் தயாரித்​துள்​ளன. பின்​னர், இதை ‘அக்​மார்க் சிறப்பு பசு நெய்’ எனக் கூறி திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​துக்கு வழங்கி உள்​ளனர். 2019 முதல் 2024-ம் ஆண்டு வரையி​லான கால​கட்​டத்​தில் திருப்​பதி தேவஸ்​தானத்​துக்கு வழங்​கப்​பட்​ட​தாகக் கூறப்​படும் கலப்பட நெய் விநி​யோகங்​களின் மதிப்பு ரூ.230 கோடி​யாகும். இதில் ரூ.96 கோடி மதிப்​பிலான கலப்பட நெய்யை உத்தர பிரதேச மாநிலம் காசி​யா​பாத்​தைச் சேர்ந்த சுக்​ருதி ஃபுட்ஸ் நிறு​வனம் தயாரித்​துள்​ளது.

இந்த வழக்​கில் நிறு​வனத்​தின் உரிமை​யாளர் கைலாஷ் சந்த் மங்​களா முக்​கிய சதி​காரர்​களில் ஒரு​வ​ராக செயல்​பட்​டுள்​ளார். இதையடுத்​து, கைலாஷ் சந்த் மங்​களா கடந்த 17-ம் தேதி கைது செய்​யப்​பட்​டார்.

மேலும், ஸ்ரீ வைஷ்ணவி டெய்ரி ஸ்பெஷாலிட்​டீஸ், மல்​கங்கா மில்க் & அக்ரோ புராடக்ட்​ஸ் உள்​ளிட்ட பல்​வேறு நிறு​வனங்​கள் மூலம் கலப்பட நெய்யை விநி​யோகிக்க மங்​களா ஒருங்​கிணைப்பு செய்​துள்​ளார்.

நெய், சுத்​தி​கரிக்​கப்​பட்ட பாமா​யில் ஆகிய​வற்​றின் கொள்​முதல், விற்​பனை தொடர்​பாக போலி​யான பதிவு​களை மங்​களா உரு​வாக்கி பராமரித்​துள்​ளார். கலப்​படப் பொருட்​கள் உண்​மை​யில் எவ்​வாறு பயன்​படுத்​தப்​பட்டன என்​பதை மறைத்​து, உண்​மை​யான பசு நெய் தயாரித்து விநி​யோகித்​தது போன்ற தோற்​றத்தை ஏற்​படுத்​தும் நோக்​கத்​துடன் இந்​தப் பதிவு​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு அமலாக்​கத் துறை தெரி​வித்​துள்​ளது.

இதே​போன்ற குற்​றச்​சாட்​டு​களின் அடிப்​படை​யில், போளே பாபா ஆர்​கானிக் டெய்ரி மில்க் நிறு​வனத்​தின் உரிமை​யாள​ரும் இயக்​குநரு​மான விபின் ஜெயினை அமலாக்​கத்​துறை ஏற்​கெனவே கைது செய்​தது குறிப்​பிடத்​தக்​கது.

<div class="paragraphs"><p>திருப்பதி லட்டு பிரசாதம்</p></div>
“பண அரசியலை முறியடிப்போம்” - மதுராந்தகத்தில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் பேச்சு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in