நடிகை ட்விஷா சர்மா மரணத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 2-வது பிரேதப் பரிசோதனை நடத்திய எய்ம்ஸ் குழு

நடிகை ட்விஷா சர்மா மரணத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 2-வது பிரேதப் பரிசோதனை நடத்திய எய்ம்ஸ் குழு
Updated on
1 min read

போபால்: நடிகை ட்விஷா சர்​மா​வின் உடலில் டெல்லி எய்ம்ஸ் மருத்​து​வக் குழு​வினர் நேற்று 2-வது பிரேதப் பரிசோதனையை நடத்​தினர்.

கடந்த மே 12ம் தேதி ம.பி.​யின் போபாலில் உள்ள தனது கணவர் வீட்​டில் நடிகை ட்விஷா சர்மா (33) தூக்​கில் தொங்​கிய நிலை​யில் கண்டெடுக்​கப்​பட்​டார். அவரது மரணத்​தில் சந்​தேகம் இருப்பதாக ட்விஷா​வின் பெற்​றோர் குற்​றம்​சாட்​டினர்.

அவர்​களின் புகாரின் பேரில் வரதட்சணை கொடுமை மற்​றும் தற்கொலைக்​குத் தூண்​டிய​தாக ட்விஷா​வின் கணவரும் வழக்கறிஞரு​மான சமர்த் சிங் மற்​றும் அவரது மாமி​யார் கிரிபாலா சிங் (முன்​னாள் மாவட்ட நீதிப​தி) ஆகியோர் மீது போலீஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

தலைமறைவாக இருந்த சமர்த் சிங் வெள்​ளிக்கிழமை கைது செய்யப்​பட்​டு, 7 நாட்​கள் போலீஸ் காவலில் வைக்​கப்​பட்​டுள்​ளார். இதனிடையே, போபாலில் நடத்​தப்​பட்ட முதல் பிரேதப் பரிசோதனை​யில் பல குறை​பாடுகள் இருப்​ப​தாக ட்விஷா​வின் குடும்​பத்​தினர் குற்​றம் சாட்​டினர்.

குறிப்​பாக, ”ட்​விஷா​வின் இடது கையில் இருந்த காயங்​கள், கழுத்து பகு​தி​யில் இருந்த தழும்​பு​கள் சரி​யாக ஆய்வு செய்யப்படவில்​லை. இது தற்​கொலையா அல்​லது கொலையா என்​ப​தைக் கண்​டறிய விரி​வான தடய​வியல், நச்​சு​யியல் சோதனை​கள் நடத்​தவில்​லை” என குற்​றம்சாட்​டினர்.

இவற்​றை சுட்​டிக்​காட்டி குடும்​பத்​தினர் தாக்​கல் செய்த மனுவை விசா​ரித்த மத்​திய பிரதேச உயர் நீதி​மன்​றம், 2-வது பிரேதப் பரிசோதனை நடத்த வேண்​டும் என மே 22ம் தேதி உத்​தர​விட்​டது. இதன் அடிப்​படை​யில், டெல்லி எய்ம்ஸ் மருத்​து​வர்​கள் 4 பேர் கொண்ட குழு நேற்று மறு ​பிரேதப் பரிசோதனை நடத்​தி​யது. அதன் பிறகு உடல் முறைப்​படி குடும்​பத்​தினரிடம் ஒப்படைக்கப்பட்​டது. இதையடுத்து ட்விஷா​வின் உடல் போபாலில் உள்ள பஜ்பஜ்தா மயானத்​தில்​ தகனம்​ செய்​யப்​பட்​டது.

நடிகை ட்விஷா சர்மா மரணத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 2-வது பிரேதப் பரிசோதனை நடத்திய எய்ம்ஸ் குழு
Su from So: பானுவுக்காக ‘மனமிறங்கிய’ சோமேஸ்வர சுலோச்சனா | திரை தேவதைகள் 18

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in