விமானங்கள் ரத்து காரணமாக துபாயில் சிக்கிய நிலையில் நாடு திரும்ப பிரதமரிடம் உதவி கோரும் நடிகை சோனல்

இடது:  சோனல் | வலது: பிவி சிந்து

இடது:  சோனல் | வலது: பிவி சிந்து

Updated on
1 min read

புதுடெல்லி: ஈ​ரான் ஏவு​கணை தாக்​குதல் காரண​மாக விமானங்கள் ரத்து செய்​யப்​பட்​ட​தால், துபா​யில் சிக்​கி​யுள்ள பாலிவுட் நடிகை சோனல் சவு​கான், நாடு திரும்ப பிரதமர் மோடியின் உதவியை நாடி​யுள்​ளார்.

ஈரான் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் தாக்​குதல் நடத்​தி​யதை அடுத்​து, ஈரான் பதிலடி தாக்​குதலில் இறங்​கியது. பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், கத்​தார் உட்பட அண்டை நாடு​களில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்​கள் மீது ஈரான் ஏவு​கணை தாக்​குதல் நடத்தி வரு​கிறது. இதனால் பல விமான நிறு​வனங்​கள் மத்​திய கிழக்கு நாடு​களுக்கு செல்​லும் விமானங் களை ரத்து செய்​தன.

அதிக விமானங்​கள் வந்து செல்​லும் துபாய் விமான நிலை​யத்​தில் பயணி​கள் கூட்​டம் கூட்​ட​மாக காத்​துக் கிடக்​கின்​றனர். ஜனத் இந்தி படத்​தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகை சோனல் சவு​கானும், துபாய் சென்று நாடு திரும்ப முடி​யாமல் தவிக்​கிறார்.

இந்​நிலை​யில் அவர் இன்​ஸ்​டாகி​ராமில் பிரதமர் மோடிக்கு ஒரு வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். ”வளை​குடா நாடு​களில் ஏற்பட்டுள்ள பதற்​றத்​தால், விமானங்​கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நான் பாது​காப்​பாக நாடு திரும்ப மத்​திய அரசு உதவி செய்து வழி​காட்ட வேண்​டும்” என கூறி​யுள்​ளார்.

பி.​வி.சிந்​தும் சிக்​கி​யுள்​ளார்: ஒலிம்​பிக் போட்​டியில் இரு முறை பதக்​கம் வென்ற பாட்மிண்டன் வீராங்​கனை பி.​வி.சிந்​து​வும், தனது பயிற்​சி​யாள​ருடன் துபாய் விமான நிலை​யத்​தில் சிக்கியுள்ளார்.

அவர் எக்ஸ் தளத்​தில், ”துபாய் விமான நிலை​யம் பதற்​றத்​துடன் காணப்​படு​கிறது. சில மணி நேரங்​களுக்கு முன்பு துபாய் விமான நிலை​யத்​தில் நாங்​கள் இருந்த இடத்​துக்கு அருகே வெடிச் ​சத்​தம் கேட்​டது. எனது பயிற்​சி​யாளர் அங்​கிருந்து வேக​மாக ஓடிவந்​தார். இங்கு மிக​வும் பதற்​ற​மான சூழல் நில​வு​கிறது.

நாங்​கள் பாது​காப்​பான இடத்​தில் உள்​ளோம். எங்​களைப் பாதுகாக்​கும் முயற்​சி​யில் ஈடு​பட்​டுள்ள துபாய் விமான நிலைய ஊழியர்​கள் மற்​றும் அதி​காரி​களுக்கு நன்​றி. எங்​களுக்கு உதவும்​ இந்​தி​ய தூதரக அதி​காரி​களுக்​கும்​ நன்​றி” என கூறி​ உள்​ளார்​.

<div class="paragraphs"><p>இடது:&nbsp; சோனல் | வலது: பிவி சிந்து</p></div>
மெட்ரோ நகரங்​களை இணைக்க 5, 6-வது ரயில் பாதைகள் அமைக்க முடிவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in