மெட்ரோ நகரங்​களை இணைக்க 5, 6-வது ரயில் பாதைகள் அமைக்க முடிவு

மெட்ரோ நகரங்​களை இணைக்க 5, 6-வது ரயில் பாதைகள் அமைக்க முடிவு
Updated on
1 min read

புதுடெல்லி: அ​திக போக்​கு​வரத்து உள்ள சென்​னை, டெல்லி போன்ற மெட்ரோ நகரங்​களை இணைக்க 5, 6-வது ரயில்​ பாதைகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்​துள்​ளது.

டெல்​லி, ஹவு​ரா, மும்​பை, சென்னை ஆகிய 4 முக்​கிய பெருநகரங்களை இணைக்​கும் அதிக போக்​கு​வரத்து கொண்ட ரயில்​ பாதைகளில்​ (எச்​டிஎன்) 5, 6-வது ரயில் ​பாதைகளை அமைக்கும் திட்​டம் தொடர்​பான ஆலோ​சனையை ரயில்வே அமைச்​சகம் அண்​மை​யில் தொடங்​கி​யுள்​ளது. இவ்​வாறு 5, 6-வது ரயில்​ பாதைகள் அமைப்​ப​தன் மூலம் இந்த பாதைகளில் அதிக பயணி​கள், சரக்கு ரயில்​களை இயக்க முடி​யும்.

இந்த 4 நகரங்​களை இணைக்​கும் அதிக போக்​கு​வரத்து கொண்ட ரயில்வே தடங்​கள் (எச்​டிஎன்) 11,051 கிலோ மீட்​டர் தூரத்​துக்கு உள்ளது. இது​தான் ரயில்​வே​யின் முது​கெலும்​பாக உள்​ளது. ஒட்டுமொத்த ரயில்வே நெட்​வொர்க்​கில் 16 சதவீத பங்கை இந்த 4 நகரங்​களை இணைக்​கும் ரயில் பாதைகள் வழங்​கு​கின்​றன. இந்தப் பாதைகள் மூலம் 41 சதவீத ரயில் போக்​கு​வரத்து நடைபெறுகிறது.

டெல்​லி - ஹவுரா (1,422 கிலோ மீட்​டர்), ஹவு​ரா - ​மும்​பை (2,039 கிலோ மீட்​டர்), டெல்​லி - ​மும்பை (1,321 கிலோ மீட்​டர்), டெல்​லி - குவாஹாட்டி (1,875 கிலோ மீட்​டர்), டெல்​லி - சென்னை (2,041 கிலோ மீட்​டர்), ஹவு​ரா - சென்னை (1,117 கிலோ மீட்​டர்), மும்​பை - சென்​னை (1,238 கிலோ மீட்​டர்) ஆகிய 7 பாதைகள் அதிக ரயில் போக்​கு ​வரத்​துப் பாதைகளாக கண்​டறியப்​பட்​டுள்​ளன.

இந்த தடங்​களில் ​தான் தற்​போது, 5, 6-வது ரயில் ​பாதைகளை அமைக்க மத்​திய ரயில்வே அமைச்​சகம் முடிவு செய்​துள்​ளது. இது தொடர்​பாக ரயில்வே மண்டல மூத்த அதி​காரி​களை ரயில்வே வாரிய அதி​காரி​கள் அழைத்து ஆலோ​சனை நடத்​தி​ உள்​ளனர்.

இந்த ஆலோ​சனைக் கூட்​டத்​தில் இரட்டை ரயில் பாதைகள், மல்ட்டி டிராக்​கிங், 5, 6-வது ரயில் ​பாதைகள் அமைத்​தல் போன்றவை குறித்து விவா​திக்​கப்​பட்​டுள்​ளன. மேலும் ரயில்வே மண்​டலங்​கள் சார்​பாக திட்ட அறிக்​கை​யை​யும் தயாரித்​துத் தருமாறு ரயில்​வே வாரி​யம்​ கேட்​டுக்​கொண்​டுள்​ளது.

மெட்ரோ நகரங்​களை இணைக்க 5, 6-வது ரயில் பாதைகள் அமைக்க முடிவு
பழிவாங்குவதாக ஈரான் சபதம்: துபாய், பஹ்ரைன், ஓமனில் பதற்றம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in