

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ் (19). இவர் தன்னை மர்ம நபர்கள் கடத்திவிட்டதாகவும் 5 லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் விடுவிப்பதாக மிரட்டுவதாகவும் குடும்பத்தாரிடம் போனில் தெரிவித்துள்ளார். மேலும், கதறி அழுதபடி வீடியோ ஒன்றையும் அனுப்பினார்.
இது தொடர்பான புகாரின் பேரில் விசாரணை நடத்திய புனே போலீஸார் ஓம் பிரகாஷின் செல்போன் எண்ணை வைத்து அவர் தங்கியிருந்த விடுதி முகவரியை கண்டுபிடித்தனர். அங்கு சென்று பார்த்தபோது கடத்தல்காரர்கள் யாரும் இல்லை.
ஓம் பிரகாஷ் மட்டுமே இருந்தார். செலவுக்கு பணம் இல்லாததால் குடும்பத்தாரை ஏமாற்றி 5 லட்ச ரூபாய் பெற ஓம் பிரகாஷ் கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக அவரை போலீஸார் கைது செய்தனர்.