பாலியல் நோக்கமின்றி மாணவிகளின் முதுகு, இடுப்பில் ஆசிரியர் அடிப்பது போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமல்ல: உச்ச நீதிமன்றம்

கொல்கத்தா நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து தீர்ப்பு
பாலியல் நோக்கமின்றி மாணவிகளின் முதுகு, இடுப்பில் ஆசிரியர் அடிப்பது போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமல்ல: உச்ச நீதிமன்றம்
Updated on
1 min read

புதுடெல்லி: போக்சோ சட்​டத்​தின் கீழ், ஒரு குழந்​தை​யுட​னான உடல்​ரீ​தி​யான தொடர்பு பாலியல் நோக்​கத்​துடன் இருந்​தால் மட்டுமே பாலியல் வன்​கொடுமை​யாக அமை​யும் என்​று நீதிமன்றம் விளக்​கம் அளித்​துள்​ளது.

மேற்கு வங்க மாநிலம் அலிபுர்​து​வாரை சேர்ந்த பாஸ்​கர் பால் என்ற புவி​யியல் ஆசிரியர், தான் கற்​பித்த பள்​ளி​யில் மாணவிகளின் முதுகைத் தடவிய​தாக​வும், இடுப்பு பகு​தி​யில் கிள்ளிய​தாக​வும், கழுத்​தைத் தொட்​ட​தாக​வும் எழுந்த புகாரின்​ பேரில் மாவட்ட குழந்தைகள் பாது​காப்பு பிரிவு விசா​ரணை நடத்தி சமர்​ப்பித்த அறிக்கை அடிப்​படை​யில் போக்சோ சட்டத்தின் 10-வது பிரி​வின் கீழ் அந்த ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்​டது.

இந்​நிலை​யில் தன் மீதான நடவடிக்​கைகளை ரத்து செய்​யக் கோரி பாஸ்​கர் பால் கொல்​கத்தா உயர் நீதி​மன்​றத்தை அணுகிய நிலை​யில், அவரது மனு நிராகரிக்​கப்​பட்​டது. இதை தொடர்ந்​து, பாஸ்​கர் பால் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​தார்.

அந்த மனு நீதிப​தி​கள் உஜ்ஜல் புயான், அதுல்​.எஸ்​.சந்​தூர்​கர் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரிக்​கப்​பட்டு தீர்ப்பு வழங்​கப்​பட்​டது. அதில் கூறப்​பட்​டுள்​ள​தாவது:

மாணவர்​கள் அளித்த வாக்​குமூலங்​களை தீவிர​மாக ஆராய்ந்​த​போது, ஆசிரியரின் செயல் உடல்​ரீ​தி​யான தண்​டனையை வெளிப்​படுத்​தி​ய​தாக​வும், ஆனால் பாலியல் வன்​கொடுமை​யையோ, பாலியல் நோக்​கத்​தையோ வெளிப்​படுத்​த​வில்​லை. ஆசிரியர் தங்​களைப் பாலியல் நோக்​கத்​துடன்​தான் தொட்​டார் என்​பதை எந்த வாக்​குமூலங்​களும் சுட்​டிக்​காட்​ட​வில்​லை.

ஆசிரியர் உடல்​ரீ​தி​யான தண்​டனை வழங்​கியது பொருத்​தமற்​றது என்​றாலும், அத்​தகைய நடத்தை மட்​டுமே போக்சோ சட்​டத்​தின் கீழ் கடுமை​யான பாலியல் வன்​கொடுமை என வழக்​குத் தொடர்​வதை நியாயப்​படுத்த முடி​யாது. அதனால், இந்த வழக்கு விசாரணை​யைத் தொடர அனு​ம​திப்​பது சட்ட நடை​முறையைத் தவறாகப் பயன்​படுத்​து​வதற்​குச் சமமாகும்.

எனவே, கொல்​கத்தா உயர் நீதி​மன்​றத்​தின் உத்​தரவு ரத்து செய்யப்படுகிறது. அதே​போல அலிபுர்​து​வார் சிறப்பு நீதிமன்றத்தில் ஆசிரியருக்கு எதி​ரான வி​சா​ரணை நடவடிக்கைகளும் ரத்து செய்​யப்​படு​கின்றன. இவ்​வாறு ​தீர்ப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

பாலியல் நோக்கமின்றி மாணவிகளின் முதுகு, இடுப்பில் ஆசிரியர் அடிப்பது போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமல்ல: உச்ச நீதிமன்றம்
ஓவிய, சிற்பக் கண்காட்சி நடத்த அரசு நிதியுதவி: தகுதியுள்ள கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in