ஓவிய, சிற்பக் கண்காட்சி நடத்த அரசு நிதியுதவி: தகுதியுள்ள கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

ஓவிய, சிற்பக் கண்காட்சி நடத்த அரசு நிதியுதவி: தகுதியுள்ள கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

சென்னை: ஓ​விய, சிற்​பக் கண்​காட்சி நடத்த அரசு வழங்​கும் நிதி​யுதவி பெறு​வதற்கு தகு​தி​யுள்ள கலைஞர்​கள் விண்​ணப்​பிக்​கலாம் என தமிழக அரசு அறி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக தமிழக அரசின் கலை பண்​பாட்​டுத்​துறை இயக்​குநர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: ஓவிய சிற்​பக் கலைஞர்​களின் கலைத் திறமை​களை வெளிப்​படுத்த அவர்​களது கலைப் படைப்​பு​கள் அடங்​கிய கலைக் காட்​சியை தனி​நபர் கலைக் காட்​சி​யாக நடத்த ஒரு நபருக்கு ரூ.25,000 வீதம் 10 கலைஞர்​களுக்​கும் மற்​றும் ஒன்​றுக்கு மேற்​பட்ட கலைஞர்​கள் இணைந்து கூட்​டாக கூட்​டுக் கலைக்​காட்​சி​யாக நடத்த ஒரு குழு​வுக்கு ரூ.50,000 வீதம் 5 குழுக்​களுக்​கும் அரசின் நிதி​யுதவி வழங்​கப்​பட்டு வரு​கிறது.

இந்த நிதி​யுத​வியை பெற தகுதி வாய்ந்த ஓவிய சிற்​பக் கலைஞர்​களிட​மிருந்து விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன. விண்​ணப்​ப​தா​ரர்​கள் மாநில அளவிலோ அல்​லது தேசிய அளவிலோ நடை​பெற்ற கலைக்​காட்​சிகளில் பங்கு கொண்​ட​வர்​களாக​வும், நுண்​கலைகளில் ஈடு​பாடு கொண்​ட​வர்​களாக​வும் இருக்க வேண்​டும்.

கலை பண்​பாட்​டுத் துறை ஓவிய நுண்​கலைக் குழு​வின் கலைச்​செம்​மல் விருது பெற்​றவர்​கள் கலை​யமைப்​பு​கள் பெயரில் கலைக்​காட்சி நடத்த விரும்​புபவர்​கள், தற்​போது நுண்​கலை பயின்று வரும் மாணவர்​களும், இதற்கு முன் இத்​திட்​டத்​தில் பயனடைந்​தோரும், விண்​ணப்​பிக்​கக் கூடாது.

விண்​ணப்​ப​தா​ரர்​கள் தங்​கள் புகைப்​படத்​துடன் கூடிய தன் விவரக் குறிப்​பு, கைப்​பேசி எண், சிறந்த படைப்​பு​களின் புகைப்​படங்​கள் 5 எண்​ணிக்​கைகள் (ஏ-4 அளவு) இணைத்​து, ‘இயக்​குநர், கலை பண்​பாட்​டுத்துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், இரண்​டாம் தளம், தமிழ்ச் சாலை, எழும்​பூர், சென்னை 600 008’ என்ற முகவரிக்கு அக்​.1-ம் தேதிக்​குள் அனுப்ப வேண்​டும். கூடு​தல் தகவல் பெற 044-28193195 என்ற தொலைபேசி எண்​ணில் தொடர்பு கொள்​ளலாம்​.

ஓவிய, சிற்பக் கண்காட்சி நடத்த அரசு நிதியுதவி: தகுதியுள்ள கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறை எதிரொலி: பஸ், விமானக் கட்டணம் உயர்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in