பட்டாசுக்கு முழு தடை விதிக்க முடியாது; சரவெடிகளை தயாரித்து விற்பனை செய்யலாம்: உச்ச நீதிமன்றம்

பட்டாசுக்கு முழு தடை விதிக்க முடியாது; சரவெடிகளை தயாரித்து விற்பனை செய்யலாம்: உச்ச நீதிமன்றம்
Updated on: 
1 min read

புதுடெல்லி: பட்டாசுக்கு தடை கோரி தொடரப்​பட்ட வழக்​கு​கள் உச்ச நீதி​மன்​றத்​தில் நீதிப​தி​கள் எம்​.எம்​.சுந்​தரேஷ், பிரசன்னா பி.வ​ராலே அமர்​வில் விசா​ரணைக்குவந்​தது. அப்​போது, மத்​திய அரசு தரப்​பில் ஆஜரான கூடு​தல் சொலிசிட்​டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்​டி, ‘‘மாசு இல்​லாத பட்டாசுகள் தொடர்​பாக பல்​வேறு ஆய்​வு​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன.

தற்​போது, பட்டாசு தயாரிப்பு வழி​முறை​கள் பல்​வேறு மாற்​றத்தை கண்​டுள்​ளன. எனவே, மாசு குறைந்த சிறிய ஷெல் வகையி​லான மற்​றும் சிறிய பைப் அடிப்​படையி​லான பட்​டாசுகளை தயாரிக்க அனு​ம​திக்​கலாம். சரவெடிகள் தயாரிப்​ப​தற்கு சில கட்டுப்பாடுகளு​டன் அனு​மதி அளிக்​கலாம் என்​பது மத்​திய அரசின் நிலைப்​பாடு’’ என தெரி​வித்​தார்.

அப்​போது, மனு​தா​ரர்​கள் தரப்​பில், ‘‘பட்​டாசுக்கு அனு​மதி வழங்​கக் கூடாது’’ என வாதிடப்​பட்​டது. நீதிப​தி​கள், ‘‘பட்​டாசுக்கு மொத்​த​மாக தடை விதிக்க முடி​யாது. முதி​யோர், குழந்​தைகள், நோய் வாய்ப்​பட்​டோரை கருத்​தில் கொண்டு காலவரம்பு நிர்ணயிக்கப்படும்’’ என்​றனர். மத்​திய அரசு சரவெடிகளுக்கு அனுமதி அளித்​துள்ள நிலைப்​பாட்டை ஏற்று், சரவெடிகளை தயாரித்​து, விற்​பனை செய்​ய​லாம் என்றும் நீதிப​தி​கள்​ அனுமதியளித்​தனர்​.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in