காஷ்மீர் எல்லையில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு

காஷ்மீர் எல்லையில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு
Updated on
1 min read

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம், மெந்தார் செக்டார் பகுதியில் அமைந்துள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் அடையாளம் தெரியாத தீவிரவாதி இந்திய எல்லைக்குள் ஊடுருவுவதை ராணுவத்தினர் நேற்று கண்டனர்.

அந்த தீவிரவாதி என் கவுன்ட்டரில் கொல்லப்பட்டதாகவும் அவரிடமிருந்த வெடிகுண்டு மற்றும் சில போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஸ்ரீநகரில் ஜி20 சுற்றுலா பணிக்குழு கூட்டம் நாளை தொடங்கவுள்ள நிலையில் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையாக 15 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in