Published : 09 Apr 2023 06:12 AM
Last Updated : 09 Apr 2023 06:12 AM

ஆதரவற்ற மாணவர்களுக்கு ஒரு சதவீத இடஒதுக்கீடு: மகாராஷ்டிர அரசு உத்தரவு

மும்பை: மகாராஷ்டிர அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: அரசு மற்றும் தனியார் நடத்தும் இல்லங்களில் வசிக்கும் 18 வயதுக்கு உட்பட்ட ஆதரவற்ற மாணவ,மாணவியருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 1% இடஒதுக்கீடு வழங்கப்படும். பெற்றோரை இழந்து உறவினர் வீடுகளில் வாழும் ஆதரவற்ற மாணவ, மாணவியரும் இந்த சலுகையைப் பெறலாம்.

ஆதரவற்ற மாணவ, மாணவியர் ஏ, பி, சி என 3 வகைகளாக பிரிக்கப்படுவர். தாய், தந்தையை இழந்து உறவினர்கள் இல்லாமல் ஆதரவற்றோர் இல்லங்களில் வசிக்கும் சிறார், ஏ பிரிவின் கீழ்சேர்க்கப்படுவர். தாய், தந்தையைஇழந்து ஆதரவற்றோர் இல்லங்களில் வசிக்கும் சிறார், பி பிரிவிலும், உறவினர்களின் அரவணைப்பில் வளரும் தாய், தந்தையை இழந்த மாணவ, மாணவியர் சி பிரிவிலும் சேர்க்கப்படுவர்.

ஆதரவற்ற இல்லங்களின் பொறுப்பாளர் மூலம் இடஒதுக்கீடு உரிமையை கோரலாம். உற வினர்கள் இல்லங்களில் வளரும் ஆதரவற்ற சிறார், மாவட்ட மகளிர், குழந்தைகள் நலத் துறை அதிகாரி மூலம் இடஒதுக்கீடு கோரலாம். இந்த இடஒதுக்கீட்டை பெற சாதி சான்றிதழ் தேவையில்லை. அனைத்து சமூகத்தினரும் இட ஒதுக்கீட்டை பெற முடியும்.

இவ்வாறு அரசாணையில் தெரி விக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் ஆதரவற்றோர் இல்லங்களில் 4,000 மாணவ, மாணவியர் தங்கியுள்ளனர். உறவினர்களின் வீடுகளில் சுமார் 800 ஆதரவற்ற மாணவ, மாணவியர் உள்ளனர். அவர்கள் அனைவரும் கல்வி, வேலைவாய்ப்பில் ஒரு சதவீத இடஒதுக்கீட்டை பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x