இந்தியாவில் ஒரே நாளில் 918 பேருக்கு கரோனா பாதிப்பு: 4 பேர் பலி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 918 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில 918 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 6,350 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 4 கோடியே 46 லட்சத்து, 96 ஆயிரத்து 338 ஆக இருக்கிறது.

கரோனா தொற்று பாதிப்பினால் ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு பேரும், கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் தலா ஒன்று என நான்கு மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் கரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 806 ஆக உள்ளது.

கரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 59 ஆயிரத்து182ஆக உள்ளது.

இதுவரை நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், 220.65 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in