சுமார் ரூ.100 கோடி அளவில் முறைகேடு: ஆக்சிஸ் வங்கியில் வருமான வரித்துறை சோதனை

சுமார் ரூ.100 கோடி அளவில் முறைகேடு: ஆக்சிஸ் வங்கியில் வருமான வரித்துறை சோதனை
Updated on
1 min read

நாட்டில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த மாதம் 8-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அதன்பின் வங்கிகளில் பல முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லி சாந்தினி சவுக் பகுதியில் உள்ள ஆக்சிஸ் வங்கிக் கிளையில் ரூ.100 கோடி மதிப்புள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் பல்வேறு கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.

இதையடுத்து வருமான வரித் துறையினர் அந்த வங்கிக் கிளையில் நேற்று திடீர் சோதனை மேற் கொண்டனர். அப்போது, போலியான வாடிக்கை யாளர்கள் பெயரில் (கேஒய்சி) விவரங்கள் கொடுத்து பல வங்கிக் கணக்குகள் தொடங்கப் பட்டு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் சட்ட விரோ தமாக வரி ஏய்ப்பு செய் திருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து வங்கிக் கணக்குகளை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின் றனர். இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்ப தாகவும், தவறு செய்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆக்சிஸ் வங்கி தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in