போலி ரூ.2000 நோட்டு அச்சடித்த 2 பேர் கைது

போலி ரூ.2000 நோட்டு அச்சடித்த 2 பேர் கைது
Updated on
1 min read

பழைய 500, 1000 ரூபாய் நோட்டு கள் செல்லாது என அறிவிக்கப்பட்டு புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. அதன்பின் புதிய நோட்டுகளை சிலர் நகல் எடுத்து போலி நோட்டுகளை புழக்கத்தில் விடுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம், சதர்பூரின் லவ்குஷ்நகரில் நேற்று நடைபெற்ற சோதனையில் வண்ண அச்சு இயந்திரத்தைப் பயன்படுத்தி 2000 ரூபாய் நோட்டு களை அச்சடித்த 2 பேரை போலீ ஸார் கைது செய்தனர். இவர் களிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்பி லான போலி ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in