Published : 01 Jan 2023 05:24 AM
Last Updated : 01 Jan 2023 05:24 AM
அயோத்தி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின் போது அயோத்தியில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இதேபோல புத்தாண்டை ஒட்டியும் அயோத்தியில் லட்சக் கணக்கான மக்கள் கூடுகின்றனர். கடந்த புத்தாண்டின்போது 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அயோத்தியில் குவிந்தனர். இந்த ஆண்டு புத்தாண்டையொட்டி நேற்று சுமார் 50 லட்சம் பேர் அயோத்தியில் முகாமிட்டனர்.
இதுகுறித்து அயோத்தி மாவட்ட ஆட்சியர் நிதிஷ்குமார் கூறும்போது, ‘‘அயோத்தியில் ஏராளமான கோயில்கள் உள்ளன. புத்தாண்டில் கோயில்களில் சிறப்புவழிபாடுகளை நடத்த பக்தர்கள் குவிந்து வருகின்றனர். ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர். இதை கருத்தில் கொண்டு அயோத்தி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது’’ என்று தெரி வித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT