டெல்லி விமான நிலையத்தில் நேருக்கு நேர் வந்த இரு விமானங்கள்: பெரும் விபத்து தவிர்ப்பு

டெல்லி விமான நிலையத்தில் நேருக்கு நேர் வந்த இரு விமானங்கள்: பெரும் விபத்து தவிர்ப்பு
Updated on
1 min read

டெல்லி விமான நிலையத்தில் இண்டிகோ மற்றும் ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் நேருக்கு நேர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது, ஆனால் உரிய நடவடிக்கையால் மோதல் தவிர்க்கப்பட்டது.

டெல்லி இந்திராகாந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் இண்டிகோ விமானமும் ஸ்பைஸ்ஜெட் விமானமும் நேருக்கு நேர் வந்தன, ஆனால் கடைசி நேரத்தில் விமானம் நிறுத்தப்பட்டு மோதல் தவிர்க்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஸ்பைஸ் ஜெட் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “விமானம் தரையிறங்கி வேகம் குறைக்கப்பட்ட நிலையில் ஓடிக்கொண்டிருந்த போது அதே பாதையில் எதிர்த்திசையில் இன்னொரு விமானம். உடனே விமானம் நிறுத்தப்பட்டு வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டது. டெல்லி-ஹைதராபாத் ஸ்பைஸ் ஜெட் எஸ்ஜி 123 விமானம் எப்போதும் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையின் வழிகாட்டுதல்களை கடைபிடிப்பதாகும்.

எந்த நிலையிலும் பயணிகள், ஊழியர்கள் பாதுகாப்பில் சமரசம் இல்லை. அனைத்து அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டு விட்டது.

இண்டிகோ விமான நிறுவனமும், “6இ-769 லக்னோ-டெல்லி விமானத்தின் பாதையில் ஸ்பைஸ்ஜெட் விமானம் முன்னால் வந்தது. கட்டுப்பாட்டு போக்குவரத்து அறையின் வழிகாட்டுதல்கள் எப்போதும் கடைபிடிக்கப்படுகிறது.

176 பயணிகளும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்த இண்டிகோ செய்தித் தொடர்பாளர், “வழிமுறைகளின் படி விமானி விமானத்தின் எஞ்ஜினை சுவிட்ச் ஆஃப் செய்தார். உடனடியாக போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எந்த ஒரு துரதிர்ஷ்டமான சம்பவமும் நடைபெறவில்லை, விமானங்கள் உரசிக்கொண்டதாக எழுந்த சில ஊடக செய்திகள் தவறானவை” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in