கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பெண்கள் உயிரிழப்பு: உயர்நிலை விசாரணைக்கு பிஹார் அரசு உத்தரவு

கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பெண்கள் உயிரிழப்பு: உயர்நிலை விசாரணைக்கு பிஹார் அரசு உத்தரவு
Updated on
1 min read

நாளந்தா: பிஹாரின் நாளந்தா பகுதி கோயி​லில் ஏற்​பட்ட கூட்ட நெரிசலில் 9 பெண்​கள் உயி​ரிழந்​தனர். பலர் காயமடைந்​தனர்.

பிஹார் மாநிலம் நாளந்தா மாவட்​டம், மேக்ரா கிராமத்​தில் ஷிதாலா தேவி கோயில் உள்​ளது. ஷிதாலா அஷ்ட​மியை ஒட்டி இந்த கோயி​லில் நேற்று ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் குவிந்தனர். அப்​போது பக்​தர்​கள் முண்​டியடித்​த​தால் கூட்ட நெரிசல் ஏற்​பட்​டது. இதில் 9 பெண்​கள் உயி​ரிழந்​தனர். பலர் காயமடைந்​தனர். அவர்​களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்​ளது.

இது குறித்து முதல்​வர் நிதிஷ் கு​மார் சமூக வலை​தளத்​தில் வெளியிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: ஷிதாலா தேவி கோயில் கூட்ட நெரிசலில் பக்​தர்​கள் உயி​ரிழந்​திருப்​பது மிக​வும் வேதனையளிக்​கிறது. அவர்​களின் குடும்​பத்​தினருக்கு ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக் கொள்​கிறேன். உயி​ரிழந்​தோர் குடும்பங்களுக்கு பேரிடர் மேலாண்மை நிதி​யில் இருந்து ரூ.4 லட்சம், முதல்​வர் நிவாரண நிதி​யில் இருந்து ரூ.2 லட்​சம் என மொத்​தம் ரூ.6 லட்​சம் இழப்​பீடு வழங்​கப்​படும். காயமடைந்தவர்கள் விரை​வில் குணமடைய பிரார்த்​தனை செய்கிறேன். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

பிரதமர் நரேந்​திர மோடி சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதிவில், “நாளந்தா மாவட்​டத்​தில் ஏற்​பட்ட விபத்து மிகுந்த வேதனையளிக்​கிறது. உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பங்​களுக்கு தலா ரூ.2 லட்​ச​மும், காயமடைந்​தவர்​களுக்கு தலா ரூ.50,000-ம் இழப்​பீடு வழங்​கப்​படும்" என்று தெரி​வித்​துள்​ளார். பிஹார் காவல்துறை தலை​வர் (டிஜிபி) வினய் குமார், கூட்ட நெரிசல் ஏற்பட்ட கோயிலை நேரில் பார்​வை​யிட்டு ஆய்வு செய்​தார்.

பின்​னர் அவர் நிருபர்​களிடம் கூறும்​போது, "அம்​மனை வழிபட 25,000 பேர் வரிசை​யில் காத்​திருந்து உள்​ளனர். கோயி​லின் கருவறை பகு​திக்கு செல்​லும் படிக்​கட்​டு​கள் சரி​யாக இல்​லை. கூட்டம் முண்​டியடித்​த​போது பக்தர்​கள் வழுக்கி விழுந்து உயிரிழப்​பு​கள் ஏற்​பட்டு உள்​ளன. உள்​ளூர் போலீஸ் நிலை​யத்​தின் அதி​காரி சஸ்​பெண்ட் செய்​யப்​பட்டு உள்​ளார். விபத்து குறித்து உயர்​நிலை விசா​ரணை நடத்​தப்​படும்" என்று தெரி​வித்​தார்.

நாளந்தா மாவட்ட எஸ்​.பி.பாரத் சோனி கூறும்​போது, “கோ​யில் கூட்ட நெரிசல் தொடர்​பாக சிறப்பு புல​னாய்வு குழு அமைக்கப்பட்டு உள்​ளது. சிசிடிவி கேம​ராக்​களை ஆய்வு செய்து கூட்ட நெரிசல் எவ்​வாறு ஏற்​பட்​டது என்​பதை கண்​டறிவோம். தவறிழைத்த அனை​வர் மீதும் கடுமை​யான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரி​வித்​தார்.

விபத்​தில் காயமடைந்த பங்​கஜ் குமார் கூறும்​போது, “அம்​மனை வழிபட நான் 3 மணி நேரம் வரிசை​யில் காத்​திருந்​தேன். கோயில் அருகே செல்​லும் போது காலை 9 மணி அளவில் கூட்ட நெரிசல் ஏற்​பட்​டது. ஒரு​வர் மீது ஒரு​வர் விழுந்​தனர். மு​திர்​வயது பெண்​கள் நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தனர். என் மீது சுமார் 20 பேர் விழுந்தனர். இளம்​வயது என்​ப​தால்​ நான்​ கா​யங்​களு​டன்​ உயிர்​ தப்​பினேன்" என்​றார்​.

கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பெண்கள் உயிரிழப்பு: உயர்நிலை விசாரணைக்கு பிஹார் அரசு உத்தரவு
கர்நாடக எம்.பி., எம்எல்ஏ.க்களுக்கு ஐபிஎல் டிக்கெட் இலவசம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in