க‌ர்நாடகா கார் விபத்தில் ஒரே குடும்பத்தில் 9 பேர் உயிரிழப்பு

க‌ர்நாடகா கார் விபத்தில் ஒரே குடும்பத்தில் 9 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் யாதகிரி மாவட்​டம் சிர்​வாரை சேர்ந்த கிருஷ்ணா நாயக் (56) நேற்று தனது குடும்​பத்​தினர் 9 பேருடன் சோராப்​பூரில் உள்ள வேணுகோ​பால் சுவாமி கோயிலுக்கு சென்​றார்.

அங்கு தரிசனம் முடிந்து காரில் சிர்​வார் நோக்கி திரும்​பினர். ஷாந்​தாப்​பூர் அருகே கார் சென்​ற​போது பெங்​களூரு​விலிருந்து குல்​பர்கா நோக்கி சென்று கொண்​டிருந்த தனி​யார் பேருந்து மீது கார் வேக​மாக மோதி​யது. இதில் இரு வாக​னங்​களும் தீப்​பிடித்து எரிந்து சாம்​பலா​யின.

இதில் காரில் பயணித்த கிருஷ்ணா நாயக் (56), அவரது மனைவி ஆனந்த கலா (50), அவரது மகன் சரணப்பா (26) உட்பட 6 பேர் உயி​ரிழந்​தனர். சரணப்​பா​வின் மனைவி நிசர்கா (24), மகன் சித்​தார்த் (3), மகள் சசிகலா (2) ஆகிய மூவரும் மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லும் வழி​யில் உயி​ரிழந்​தனர். பேருந்​தில் பயணித்த 30-க்​கும் மேற்​பட்ட பயணி​கள் சிறு காயங்​களு​டன் உயிர் தப்​பினர்.

விபத்து குறித்து போலீஸார் கூறுகை​யில், ‘‘ஒரே குடும்​பத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். முதல்​கட்ட விசா​ரணை​யில் கார் டயர் வெடித்​த​தில் கட்​டுப்​பாட்டை இழந்து பேருந்து மீது மோதி விபத்து ஏற்​பட்​டது தெரிய ​வந்​துள்​ளது” என்​றனர்​.

க‌ர்நாடகா கார் விபத்தில் ஒரே குடும்பத்தில் 9 பேர் உயிரிழப்பு
திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in