அசாமில் போலி ஆவணங்களுடன் 9 வங்கதேசத்தினர் கைது

அசாமில் போலி ஆவணங்களுடன் 9 வங்கதேசத்தினர் கைது
Updated on: 
1 min read

போங்கைகாவ்: அ​சாம் மாநிலத்​தில் மேற்​கொள்​ளப்​பட்ட சோதனை​யில் போலி இந்​திய அடை​யாள அட்​டைகளு​டன் சுற்​றித்​திரிந்த 9 வங்கதேசத்தினர் நேற்​று​முன்​தினம் கைது செய்​யப்​பட்​டனர்.

இதுகுறித்து போங்​கை​கான் மாவட்​டக் காவல் கண்​காணிப்​பாளர் நுமல் மஹத்தா செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: நியூ போங்​கை​கான் ரயில் நிலை​யத்​தில் நடத்​தப்​பட்ட சோதனை​யின்​போது சந்​தேகத்​தின் பேரில் 9 பேரைப் பிடித்து விசா​ரணை நடத்​தினோம்.

அப்​போது, அவர்​கள் அனை​வரும் வங்​கதேசத்​தைச் சேர்ந்​தவர்​கள் என்​பது உறுதி செய்​யப்​பட்​டது. முதலில் 6 பேரும், அதைத் தொடர்ந்து 3 பேரும் கைது செய்​யப்​பட்​டனர்.

அவர்​களிடம் இருந்து 4 வங்​கதேச அடை​யாள அட்​டைகள், 6 மொபைல் போன்​கள், 1 வங்​கதேச பாஸ்​போர்ட், 3 போலி இந்​திய ஆதார் அட்​டைகள் மற்​றும் 5 ரயில் பயணச் சீட்​டு​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன.

முதற்​கட்ட விசா​ரணை​யில், இவர்​கள் அண்டை மாநிலம் வழி​யாக அசா​முக்​குள் ஊடுரு​வி, இங்​கிருந்து வேலை தேடி வெளி​மாநிலங்​களுக்​குச் செல்​லத் திட்​ட​மிட்​டிருந்​தது தெரிய​வந்​துள்​ளது.

கைது செய்​யப்​பட்​ட​வர்​கள் மீது சட்​டப்​பூர்​வ​மான நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

முன்​ன​தாக, செப்​டம்​பர் 16-ம் தேதி, குவாஹாட்டி மற்​றும் ரங்​கியா ஆகிய பகு​தி​களில் அசாம் காவல் துறை​யினர் நடத்​திய தனித்​தனி சோதனை​களில், பெண்​கள் மற்​றும் சிறு​வர்​கள் உட்பட 27 வங்​கதேச ஊடுரு​வல்​காரர்​கள் கைது செய்​யப்​பட்​டது குறிப்​பிடத்​தக்​கது.

அசாமில் போலி ஆவணங்களுடன் 9 வங்கதேசத்தினர் கைது
4 ஆண்டுகளாகப் பதப்படுத்தப்பட்ட 80 வயது முதியவரின் உடல்: இறந்தவரை உயிர்ப்பிக்கும் தொழில்நுட்பத்தின் வருகைக்காக காத்திருந்த குடும்பத்தினர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in