சீன எல்லையில் கணிக்க முடியாத சூழல்: இந்திய ராணுவ தளபதி கருத்து

மனோஜ் பாண்டே
மனோஜ் பாண்டே
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே பேசியதாவது.

லடாக் பகுதியில் சீன ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. அதோடு அந்த நாடு எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து வருகிறது. எனவே எல்லையில் கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது. கிழக்கு லடாக் எல்லையில் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். அரசியல், ராணுவ ரீதியாக இந்தியா, சீனா இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. 7 எல்லைப் பகுதிகளில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதில் 5 பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது. 2 எல்லைப் பிரச்சினைகள் தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இந்திய தரப்பில் லடாக் எல்லைப் பகுதிகளில் புதிதாக விமான தளம், ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. சீன வீரர்களுக்கு இணையாக எல்லையில் இந்திய வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், அரசு முறை பயணமாக இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே நேற்று பிரான்ஸ் புறப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in