என்டிடிவி ஒளிபரப்புக்கான ஒரு நாள் தடை நிறுத்திவைப்பு

என்டிடிவி ஒளிபரப்புக்கான ஒரு நாள் தடை நிறுத்திவைப்பு
Updated on
1 min read

என்டிடிவி ஒளிபரப்புக்கான ஒரு நாள் தடையை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

கடந்த ஜனவரியில் பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமானப் படை தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பான செய்திகளை என்டிடிவி இந்தி செய்தி சேனல் ஒளிபரப்பியது. அப் போது பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை வெளியிட்ட தாக கூறி, அந்த சேனல் 1 நாள் ஒளிபரப்புக்கு (நவம்பர் 9) மத்திய அரசு கடந்த 4-ம் தேதி தடை விதித்தது.

இதற்கு எதிராக ‘என்.டி.டி.வி. இந்தியா’ நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் உத்தரவு அரசியல் சாசனத்துக்கு விரோத மானது. மேலும் உள்நோக்கத் துடன் இந்த உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் என்டிடிவி ஒளிபரப்புக்கான ஒருநாள் தடையை மத்திய அரசு நேற்று இரவு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in