

நிதி முறைகேடு வழக்கில் ஜாமீனில் விடுதலையாவதற்கு வரும் பிப்ரவரி 6-ம் தேதிக்குள் ரூ.600 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என்று சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய்க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெபாசிட் தொகை செலுத்துவது குறித்து புதிய திட்டம் ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் சுப்ரதா ராய் சமர்ப்பித்துள்ளார். இத்திட்டம் குறித்து இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியமும் (செபி), இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவி வரும் வழக்கறிஞர் சேகர் நாப்தேவும் தங்கள் கருத்தை தெரிவிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலீட்டாளர்களுக்கு பணத்தை தராமல் பல ஆயிரம் கோடி ரூபாய் மோடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில், சுப்ரதா ராய் கடந்த 2014-ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2 ஆண்டுகள் சிறை வாசத்துக்குப் பிறகு சுப்ரதா ராய் தற்போது பரோலில் இருந்து வருகிறார்.